கைமீறி போயிருச்சே.. டென்ஷனில் இம்ரான்கான்.. நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று விவாதம்..!
இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீது விவாதம் நடக்கிறது
இஸ்தான்புல்: ஆட்சி ஆட்டம் காண தொடங்கி உள்ள நிலையில், இன்று இம்ரான்கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது..!
Recommended Video
இம்ரான்கான் மீது எதிர்க்கட்சிகள் கடுமையான அதிருப்தியில் உள்ளன.. நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக கையாண்டார், பணவீக்கம், விலைவாசி உயர்வு இதையெல்லாம் சரியாக கையாளவில்லை என்று பலவிதமான குற்றச்சாட்டுகள் இம்ரான்கான் மீது உள்ளது.
இதைதவிர, தன்னை விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து ஜெயிலுக்குள் அடைத்து வரும் இம்ரான்கான் போக்கு குறித்தும் கொந்தளிப்பு உள்ளது.

தீர்மானம்
ஒருகட்டத்தில் எதிர்க்கட்சிகள் வெறுப்பின் எல்லைக்கு வந்துவிட்டன.. அதனால்தான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வர முனைந்துள்ளன.. எனினும், இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஓபனாகவே சொல்லியும்கூட, இதனை இம்ரான் கான் ஏற்காமல் மறுத்துவிட்டார்.. வேறு வழியில்லாமல், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் மார்ச் 28-ல் தாக்கல் செய்திருந்தன..

விவாதம்
இந்த தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடக்கிறது... தொடர்ந்து 3-ந் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படும். மொத்தமுள்ள 342 எம்பிக்களில், 172 பேரின் ஆதரவு தேவையாக இருக்கிறது.. இப்போதைக்கு இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்பிக்கள் இருக்கிறார்கள். அதேபோல, ஆளும் கூட்டணிக்கு பிற கட்சிகளை சேர்ந்த 23 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. இதனிடையே, இம்ரான் கானின் பிடிஐ கட்சியை சேர்ந்த 24 எம்பிக்களும் அரசின் மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இம்ரான்கான்
முன்னதாக எதிர்க்கட்சிகளுக்கு தனது பலத்தை காட்டும் விதமாக கடந்த 27-ந் தேதி தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தினார். பேரணியில் பேசிய இம்ரான்கான் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனமும் செய்திருந்தார்.. உடனே, எதிர்க்கட்சிகளும், தங்களுக்கு இருக்கும் ஆதரவை காட்டும் விதமாக நேற்று முன்தினம் இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணியை நடத்தினர்... இதில் கலந்து கொண்டவர்களும் இம்ரான்கானை கடுமையாக விமர்சித்தனர்.

என்னாகும்?
இப்படிப்பட்ட சூழலில்தான், இம்ரான்கான் அரசுக்கு ஆதரவளித்து வந்த எம்.கி.எம் கட்சி ஆதரவை விலக்கி கொண்டுவிட்டது.. எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக எம்.கி.எம் கட்சி அறிவித்துவிடவும், பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கானின் அரசு... அதாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாகவே, இம்ரான்கான் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ராஜினாமா?
எனவே, தானாகவே முன்வந்து இம்ரான்கான் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது... காரணம், நாட்டு மக்களிடம் உரையாற்ற முடிவு செய்திருந்த நிலையில், திடீரென அதனை ரத்து செய்துவிட்டது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி வருகிறது.. இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடக்க போகும் விவாதம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications