டைம் ஓவர்.. பதவி விலகுகிறாரா இம்ரான்கான்.. பாக். பாராளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்
இம்ரான்கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நடக்கிறது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றன... இ்ம்ரான்கானின் பிடிஐ கட்சி உறுப்பினர்கள் சிலரே நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், இம்ரான்கான் அரசு கவிழுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
பாகிஸ்தானில் கடந்த சில வருடங்களாகவே பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது.. இதனால், ஒருபக்கம் கடன் சுமை, இன்னொரு பக்கம் பொருளாதார வீழ்ச்சி என பாகிஸ்தான் சிக்கி கொண்டுள்ளது.
இது எல்லாவற்றிற்கும் காரணமே பிரதமர் இம்ரான் கானின் தவறான கொள்கைகள்தான் என்ற குற்றச்சாட்டு உள்ளது.. இதை எதிர்க்கட்சிகளே தொடர்ந்து ஓபனாக சொல்லி வருகிறார்கள்..

விமர்சனங்கள்
அதாவது, இம்ரான்கான் பொருளாதாரத்தை மிக மோசமாக கையாண்டார், பணவீக்கம், விலைவாசி உயர்வு இப்படி எத்தனையோ குற்றச்சாட்டுகள் இம்ரான்கான் மீது சொல்லப்பட்டுள்ளன.. இதைதவிர, தன்னை விமர்சிப்பவர்களை எல்லாம் தயவுசாட்சண்யம் இல்லாமல் கைது செய்து ஜெயிலுக்குள் அடைத்து வருவது குறித்தும் இம்ரான்கான் மீது புகார்கள் உள்ளன..

போர்க்கொடி
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருவதால் பதவியைக் காக்க இம்ரான் கான் போராடி வருகிறார்.. எனவே, இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.. ஆனால் இதனை இம்ரான் கான் ஏற்கவில்லை.. மறுத்துவிட்டார்... என்ன நடந்தாலும் சரி, பதவி மட்டும் ஒருபோதும் விலகமாட்டேன் என உறுதியாக சொல்லி வருகிறார்..

இன்று நடக்கிறது
இதனால்தான் வேறு வழியில்லாமல், நம்பிக்கையில்லா தீர்மானம் என்ற விஷயத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் தாக்கல் செய்திருந்தன.. அந்த தீர்மானத்தின் மீதுதான் இன்று அதாவது 28ம் தேதி வாக்கெடுப்பு நடக்க உள்ளது.. மொத்தமுள்ள 342 எம்பிக்களில், 172 பேரின் ஆதரவு தேவையாக இருக்கிறது..

எம்பிக்கள் ஆதரவு
இப்போதைக்கு இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்பிக்கள் இருக்கிறார்கள். அதேபோல, ஆளும் கூட்டணிக்கு பிற கட்சிகளை சேர்ந்த 23 எம்பிக்களின் ஆதரவு உள்ளது... இவர்கள்தான் இப்போதைய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற திட்டமிட்டுள்ளனர்... இதனிடையே, இம்ரான் கானின் பிடிஐ கட்சியை சேர்ந்த 24 எம்பிக்களும் அரசின் மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இவர்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது..

எதிர்க்கட்சிகள்
இது இம்ரான்கானை மேலும் நிலைகுலைய வைத்து வருகிறது.. எனவே தன்னுடைய பதவி பறிபோய்விடக்கூடாது என்ற பதைபதைப்பும் இம்ரானுக்கு ஏற்பட்டுள்ளது.. சுருக்கமாக சொன்னால், எதிர்க்கட்சிக்கு 163 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், அவர்கள் மெஜாரிட்டியை பெறுவதற்கு வெறும் 9 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை... அப்படி எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை பெற்றுவிடும் சூழலில், பாகிஸ்தானில் ஆட்சி கவிழக்கூடும் என்றும், உடனடியாக தேர்தல் நடக்கக்கூடும் என்றும் கணிக்கப்படுகிறது..

நம்பிக்கை வாக்கெடுப்பு
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்களும் நேற்றுமுதல் கசிந்து வருகின்றன.. பாகிஸ்தானில் இதுவரை எந்த பிரதமரும் முழுமையாக 5 வருடங்கள் பதவிக் காலத்தில் நீடித்தது கிடையாது என்பது வரலாற்று உண்மை.. இதில் இம்ரான்கான் தப்பிப்பாரா? அல்லது வழக்கம்போல் பதவி பறிபோகுமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications