2வது தாக்குதல் வேறு மாதிரி இருக்கும்! கங்கணம் கட்டும் இஸ்ரேல்.. ஈரானின் அணு உலைகளுக்கு குறி?
ஜெருசலேம்: நெதன்யாகுவின் வீட்டில் ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் இராணுவம் பதிலடி தர முடிவு செய்துள்ளதாம். இதற்கு முன் ஈரான் மீது நடந்த தாக்குதலில் இருந்து இந்த புதிய தாக்குதல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று இஸ்ரேலின் சேனல் 13 தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டிற்கு எதிரான தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானுக்கு எதிரான மற்றொரு பதிலடி தாக்குதலை நடத்த இஸ்ரேலின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாம் கட்ட தாக்குதலை நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேலில் சிசேரியாவில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தனிப்பட்ட இல்லத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்கியதற்கு பதிலடியாக இந்த இரண்டாம் கட்ட தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் பதிலடி தாக்குதலை நடத்த இஸ்ரேலின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் இந்த நிழல் யுத்தம் ஒரு நேருக்கு நேர் இராணுவ மோதலாக வெடிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நேரம் உள்ள நிலையில்.. இஸ்ரேல் - ஈரான் இடையே போர் வெடிக்க போவதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அணு உலைகள்: இப்படிப்பட்ட நிலையில்தான் சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் புகார் வைத்துள்ளது. தங்களின் அணு உலைகளை இஸ்ரேல் தாக்க வாய்ப்பு உள்ளதாக ஈரான் புகார் அளித்துள்ளது. அணுசக்தி தளங்களுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயல்களும் சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டது. இதை அனுமதிக்க கூடாது என்று ஈரான் புகார் வைத்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக்குழுவுக்கு முறையான கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஈரானின் அணு உலை மையங்களை விடக்கூடாது.. அதைதான் முதலில் தாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
இரண்டு நாட்டு மோதல்: கடந்த 2 நாட்களுக்கு முன் ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீரென பங்கருக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
அதன்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் 2-3 இஸ்ரேலின் டாப் தலைவர்கள் பங்கரில் பதுங்கி இருந்துள்ளனர். பங்கரில் இருந்தபடியே இவர்கள் தாக்குதலை கண்காணித்துள்ளனர்.
பொதுவாக இது போன்ற பெரிய தாக்குதல் சமயங்களில் தலைவர்கள் பங்கருக்குள் செல்வது வழக்கம். அப்படிதான் பெஞ்சமின் நெதன்யாகு பங்கருக்குள் சென்று இருந்தார். அதோடு ஈரான் உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்தலாம்.. வானத்தில் விமானங்களை அனுப்பி டாக் பைட் நடத்தி இருக்கலாம்.. விமானங்கள் இஸ்ரேல் எல்லைக்குள் வரவும் வாய்ப்புகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்கப்பட்டது. இதற்கு அடுத்து பாதுகாப்பு கருதி.. பெஞ்சமின் நெதன்யாகு பங்கருக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரப்போவதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக ஈரான் ராணுவம் ட்வீட் ஒன்று செய்துள்ளது. ஈரான் ராணுவம் சார்பாக செய்யப்பட்டுள்ள போஸ்டில், டிக் டாக்.. 3வது #TruePromise3 அட்டாக் என்று குறிப்பிட்டு உள்ளனர். முன்னதாக #TruePromise1 #TruePromise2 என்ற பெயரில் இஸ்ரேலில் ஒரே நாளில் ஈரான் இரண்டு கட்டமாக தாக்கியது. இதனால் 3வது கட்டமாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்க போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications