பாக். போகும் ரஷ்யாவின் S- 400? இந்தியாவால் இனி தாக்க முடியாது? துருக்கியால் புது பிரச்சனை..பின்னணி
அங்காரா: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. நம்நாட்டை தாக்க முயன்ற பாகிஸ்தானின் ட்ரோன், ஏவுகணைகள், போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்ததில் ரஷ்யாவிடம் இருந்து நாம் வாங்கிய வான்வெளி பாதுகாப்பு அமைப்பான எஸ் - 400 முக்கிய பங்காற்றியது. இதனால் தான் பாகிஸ்தானால் நம்மை தாக்க முடியவில்லை. இந்நிலையில் தான் துருக்கி மூலமாக ரஷ்யாவின் எஸ் 400 அமைப்பு பாகிஸ்தான் செல்ல வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இது நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தானை நம்மால் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முடியாத சூழல் வரலாம். இதனால் இந்தியா உடனடியாக சுதாரிக்க வேண்டும். மேலும் துருக்கியிடம் வழியாக ரஷ்யாவின் எஸ் 400 ஏவுகணை எப்படி பாகிஸ்தான் செல்ல வாய்ப்புள்ளது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை நம் நாடு கையில் எடுத்தது. பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி கொடுத்தது. நம் நாட்டின் பிரமோஸ் உள்பட பல ஏவுகணைகள் சீறிப்பாய்ந்து பாகிஸ்தானை சிதைத்தது. 9 பயங்கரவாத முகாம்கள், பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டது.

நம் நாடு தொடுத்த அதிரடி தாக்குதலில் கதறிய பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்காக நம்மிடம் சரணடைந்தது. இதையடுத்து இருநாடுகளின் மோதல் முடிவுக்கு வந்தது. முன்னதாக பாகிஸ்தானும் நம்மை தாக்க முயன்றது. பாகிஸ்தானும் நம் நாட்டை குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பியது. இவை அனைத்தும் வானில் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தானால் நம்மை தொட முடியவில்லை.
பாகிஸ்தானின் இந்த தாக்குதலில் இருந்து நம் நாடு தப்பிக்க முக்கிய காரணம் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் தான். இது ரஷ்யாவின் தயாரிப்பாகும். நம் நாட்டில் இது ‛சுதர்ஷன சக்ரா' என்று நம் நாட்டில் அழைக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நம் நாட்டை நோக்கி ஏவிய ஏவுகணை, ட்ரோன்களை இந்த எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் தான் இடைமறித்து தாக்கி அழித்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் அடிவாங்கிய பிறகு பாகிஸ்தானும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் இருந்து தப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது பாகிஸ்தானுக்கு, நம் நாடு பயன்படுத்தும் ரஷ்யா தயாரிப்பான எஸ் - 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் கிடைக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் துருக்கியாகும்.
‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் துருக்கி, நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து நம் நாடு மீது ட்ரோன் தாக்குதலுக்கு உதவியது. இதனால் நம் நாட்டின் புதிய எதிரியாக துருக்கி மாறி உள்ளது. இப்படியான சூழலில் தான் துருக்கியிடம் இருந்து ரஷ்யாவின் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் பாகிஸ்தான் கைக்கு செல்லலாம் என கூறப்படுகிறது. அதாவது துருக்கி நேட்டோ அமைப்பில் உள்ளது. இதில் அமெரிக்காவும் உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது துருக்கி - அமெரிக்காவுடன் உறவை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவிடம் இருந்து 5ம் தலைமுறை விமானமான எஸ் -35 வாங்க துருக்கி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக துருக்கி அதிபர் தையிப் எர்டோகன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் பேசி உள்ளார். சமீபத்தில் கனடாவில் நடந்த ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் இருவரும் பேசினார்.
ஆனால் ஒரு சிக்கல் உள்ளது. அது என்னவென்றால் பாதுகாப்பு துறையை எடுத்து கொண்டால் அமெரிக்கா ஒரு நிலைப்பாட்டை கடைப்பிடிக்கப்படுகிறது. பாதுகாப்பு துறை சார்ந்த ஆயுதங்களை அமெரிக்காவிடம் பெற விரும்பும் நாடுகள் ரஷ்யாவுடம் இருந்து ராணுவ தளவாடங்களை வாங்க கூடாது என்பது தான் அது. குறிப்பாக நேட்டோ நாடுகள் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு. ஆனால்அதனை மீறி துருக்கி - ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டமை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த ஒப்பந்த கடந்த 2017 ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 2.5 பில்லியன் டாலருக்கு இந்த ஒப்பந்தம் முடிக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவின் தடை சட்டங்களுக்கும் துருக்கி பாதிக்கப்பட்டது.
ஆனாலும் நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம் என்று துருக்கி அமெரிக்காவை கண்டுக்கொள்ளவில்லை.நம் நாட்டை போல் ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை வாங்கி வைத்துள்ளது. துருக்கியிடம் 2 எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் உள்ளது. இப்போது அமெரிக்காவிடம் இருந்து எப் 35 ரக போர் விமானங்களை துருக்கி வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கு ரஷ்யாவிடம் இருந்து வாங்கி வைத்திருக்கும் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு பிரச்சனையாக உள்ளது இதனால் இந்த எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை துருக்கி விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. துருக்கிக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக நல்ல உறவு உள்ளது. இப்போது நம் நாட்டிடம் பாகிஸ்தான் அடியும் வாங்கி உள்ளது. இதனால் ரஷ்யாவின் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தானிடம் விற்பனை செய்துவிட்டு அமெரிக்காவிடம் இருந்து எப் 35 ரக போர் விமானங்களை பெற துருக்கி முடிவு செய்துள்ளது. இது நடக்கும் பட்சத்தில் இந்தியா - துருக்கி இடையேயான மோதல் இன்னும் அதிகமாகும்.
ஆனால் துருக்கி அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்த விரும்புகிறது. அதுமட்டுமின்றி 'ஸ்டீல் டோம்' என்ற புதிய பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை துருக்கி உருவாக்கி வருகிறது. இதில் துருக்கிய பாதுகாப்பு நிறுவனங்களான ASELSAN, ROKETSAN மற்றும் MKE உள்ளிட்டவை ஈடுபட்டு வருகின்றன. இதனால் இதனால் ரஷ்யாவின் எஸ் 400 அமைப்பை விற்க துருக்கி தயாராகி வருகிறது. அதோடு அமெரிக்காவின் எப் 35 ரக போர் விமானங்களைவாங்க ஆர்வம் காட்டி வருகிறது.
இதுதொடர்பாக துருக்கியின் முன்னாள் அமைச்சர் கேவிட் காக்லர் கூறுகையில், ‛‛எஸ் 400 விற்பனை செய்வதை துருக்கி பரிசீலனை செய்கிறது. இதனை இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யலாம். அதிகபட்சமாக பாகிஸ்தானுக்கு வழங்கப்படலாம். இருப்பினும் இது யூகம் தான்'' என்றார். மேலும் ரஷ்யாவின் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை தற்போது வரை துருக்கியால் ஒருங்கிணைப்பு செய்ய முடியவில்லை. இதனால் துருக்கி தான் வைத்திருக்கும் 2 எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால் அதனை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்து அமெரிக்காவை திருப்திப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் கூட நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக ஒரு நாட்டின் ஆயுதத்தை அந்த நாட்டின் அனுமதியின்றி இன்னொரு நாடு மற்றொரு நாட்டுக்கு விற்பனை செய்ய முடியாது. இதனால் ரஷ்யாவின் முன்அனுமதியின்றி துருக்கியால் அதனை இந்தியா, பாகிஸ்தான் உள்பட எந்த நாட்டுக்கும் விற்பனை செய்ய முடியாது. இந்தியாவுக்கு விற்பனை செய்தால் கூட ரஷ்யா ஏற்கலாம். ஆனால் பாகிஸ்தானுக்கு துருக்கி வழங்குவதில் பல சிக்கல்கள் ஏற்படும்.
ஏற்கனவே இந்தியா எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி வரும்போது அதனை நம் நாட்டின் எதிரி நாட்டு கைக்கு போவதை இந்தியா விரும்பாது. இதனால் துருக்கி பாகிஸ்தானுக்கு வழங்க நினைத்தால் அதனை நம் நாடு எதிர்க்கும். இதனால் ரஷ்யாவும் அனுமதி மறுக்கலாம். ஏனென்றால் ரஷ்யாவுக்கும், நம் நாட்டுக்கும் நல்ல உறவு உள்ளது. பிரதமர் மோடிக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் இடையேயான நல்லுறவு தொடர்ந்து வருகிறது.
நம் நாட்டின் ராணுவ தளவாடங்களில் 60 சதவீதத்துக்கு மேலானவை ரஷ்யாவின் தயாரிப்பாகும். அதேபோல் ரஷ்யாவிடம் இருந்து ஏராளமான கச்சா எண்ணெயை நாம் வாங்கி வருகிறோம். இப்படி நட்பை தாண்டி பொருளாதார ரீதியாக ரஷ்யாவுடன் நம் நாடு நெருக்கம் காட்டி வருகிறது. இதனால் இந்த எஸ் 400யை துருக்கி நினைத்தாலும் பாகிஸ்தானுக்கும் விற்பனை செய்ய முடியாது என்கின்றனர் நிபுணர்கள். மேலும் பாகிஸ்தான் தற்போது நிதி நெருக்கடியில் உள்ளது. சர்வதேச அமைப்புகளிடம் கடன் கோரி பிச்சை எடுத்து வருகிறது. இந்த எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு ஒன்றின்ற விலை 500 மில்லியன் அமெரிக்க டாலராகும். தற்போதைய நிதி நிலைமையில் பாகிஸ்தானால் இதனை பெற முடியாது. ஆனால் துருக்கி நினைத்தால் உதவலாம்.
இதனால் பாகிஸ்தான் வசம் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு செல்வதில் பல சிக்கல்கள் உள்ளன. ரஷ்யாவின் நிலைப்பாட்டை பொறுத்தே இது பைனல் ஆகும். மேலும் கடந்த 2018 ம் ஆண்டில் நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மொத்தம் 5 எஸ் 500 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் கடந்த 2021ம் ஆண்டு கிடைத்தது. தற்போது வரை எஸ் 300 ஏவுகணை சிஸ்டம் 3 நமக்கு கிடைத்துள்ளது. இன்னும் 2 வரவில்லை. இதனை வழங்க வேண்டும் என்று நம் நாடு ரஷ்யாவுக்கு கோரிக்கை வைத்தது. மீதமுள்ள எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை 2026ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் ரஷ்யா அனுமதித்தால் துருக்கியிடம் இருக்கும் 2 எஸ் 400 அமைப்பும் இந்தியாவுக்கு கிடைக்கலாம். ஆனால் துருக்கி நமக்கு எதிரியாக இருப்பதால் அந்த நாட்டிடம் இருந்து இந்தியா அதனை வாங்குமா? என்பது கேள்விக்குறி தான். இதனால் துருக்கியிடம் உள்ள ரஷ்யாவின் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு தொடர்பான விவகாரத்தில் என்ன நடநக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications