ஈரானில் நடந்த நிலநடுக்கம்.. சீக்ரெட்டாக நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனையா? திடீர் பரபரப்பு! என்ன நடக்குது
டெஹ்ரான்: அக்டோபர் 5 ஆம் தேதி ஈரானின் பாலைவனத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கடுமையான விவாதங்கள் ஏற்பட்டு உள்ளது. ஈரான் அணுகுண்டு சோதனை செய்துள்ளதோ என்ற ஊகங்களை இந்த நிலநடுக்கம் தூண்டி உள்ளது.
ஈரான் அடிக்கடி பூகம்பத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடு, ஆனால் அக்டோபர் 5 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் இயல்பான நிலநடுக்கம் கிடையாது.. அது இயற்கையான நிலநடுக்கம் கிடையாது என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

ஈரான் அணுசக்தி சோதனை நடத்தியதா என்ற குழப்பத்தை, கேள்விகளை இந்த விவகாரம் எழுப்பி உள்ளது. அங்கே நில அதிர்வு ஏற்பட்ட காலை நேரம் மற்றும் இருப்பிடம் ஆகியவை அதிக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் இந்த நேரம் இருப்பிடம் ஒத்துப்போவதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். அணு ஆயுதத்தை ஈரான் உருவாக்கி விட்டதா அல்லது ஈரான் அணு ஆயுதத்தை வாங்கிவிட்டு அதை சோதனை செய்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரானின் செம்னான் மாகாணத்தில் உள்ள அராடன் கவுண்டியில் காலை 10:45 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கம் 12 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியல் நிறுவனத்தை மேற்கோள் காட்டி அது கூறியது. இவைதான் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கே நில அதிர்வு ஏற்பட்ட காலை நேரம் மற்றும் இருப்பிடம் ஆகியவை அதிக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஈரான் நடத்திய வான்வெளி தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளது இஸ்ரேல். தங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தால் மோசமான வலுவான தாக்குதலை கொடுப்போம் என்று ஈரான் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் அதற்கு அஞ்சாமல் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே ஈரான் - லெபனான் - இஸ்ரேல் போர் உச்சம் அடைந்து உள்ளது. இது கண்டிப்பாக உலகபோராக் மாறும் அபாயம் உள்ளது. முக்கியமாக இந்த போர் நடக்கும் பட்சத்தில் அது அணு ஆயுத போராக நடக்கும் அபாயமும் உள்ளது.
இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் காரணமாக நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நாட்டு மோதல் பெரிய போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
அணு உலை: ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு பதிலடியாக ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.. விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது
ஈரான் அணு ஆயுதம்: இந்த தாக்குதலுக்கு இடையில்தான் தங்களின் அணு ஆயுத கொள்கையை ,மறுபரிசீலனை செய்ய போவதாக ஈரான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அணு ஆயுதம் இல்லை என்ற கொள்கையை அந்த நாடு மறுபரிசீலனை செய்யும் என்று அறிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை செய்துள்ளது. 2015ல் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் 2018ல் டிரம்ப் ஆட்சியில் நீக்கப்பட்டது.
ஈரான் அமெரிக்கா சொல்வதை கேட்கவில்லை மற்ற ஆயுத சோதனைகளை செய்கிறது என்று கூறி ஒப்பந்தத்தை நீக்கியது. இதன் காரணமாக ஈரானுக்கு தற்போது அணு ஆயுதம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில் தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது.
ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும். ஆனால் இதில் சிக்கலே.. ஹிஸ்புல்லா இயக்கம் தற்போது சேதங்களை சந்தித்து உள்ளதால்.. அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கு சில வாரங்கள் ஏற்படலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications