பெண்களின் வயதுக்கு ஏற்ப விலை வைத்து செக்ஸ் அடிமைகளாக விற்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்
பாக்தாத்: யாஸிதி மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்களை அடிமைகளாக விற்பதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விலை நிர்ணயம் செய்து வைத்திருப்பது ஆவணம் ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதுடன் அவர்களை சந்தையில் செக்ஸ் அடிமையாக விற்று வருகிறார்கள். தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் புதிய பகுதிகளை கைப்பற்றும் போது எல்லாம் அந்த பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்திச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு கடத்திச் செல்லும் பெண்களை வெளிநாட்டில் இருந்து வரும் போராளிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக தீவிரவாதிகள் கூறுகின்றனர். ஆனால், அப்பெண்கள் சந்தைகளில் செக்ஸ் அடிமைகளாக விற்கப்படுவது அங்கிருந்து தப்பி வந்த பெண்கள் சிலர் அளித்த தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
செக்ஸ் அடிமை சந்தைகளில் சிறுமிகளை சில நூறு ரூபாய் அல்லது ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு தீவிரவாதிகள் விற்பனை செய்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், வயதுக்கு தக்க பெண்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விலை நிர்ணயம் செய்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஆவணம் ஒன்று அந்நாட்டு பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
- 40 முதல் 50 வயதுக்குட்பட்ட யாஸிதி (அ) கிறிஸ்தவ பெண்ணின் விலை 50 ஆயிரம் தினார்
- 30 முதல் 40 வயதுக்குட்பட்ட யாஸிதி (அ) கிறிஸ்தவ பெண்ணின் விலை 75 ஆயிரம் தினார்
- 20 முதல் 30 வயதுக்குட்பட்ட யாஸிதி (அ) கிறிஸ்தவ பெண்ணின் விலை 1 லட்சம் தினார்
- 10 முதல் 20 வயதுக்குட்பட்ட யாஸிதி (அ) கிறிஸ்தவ சிறுமியின் விலை 1.5 லட்சம் தினார்
- 1 முதல் 9 வயதுடைய யாஸிதி (அ) கிறிஸ்தவ சிறுமியின் விலை 2 லட்சம் தினார்
இந்த ஆவணத்தில் உள்ள தகவலின் படி ஒரு நபர் மூன்று பெண்களுக்கு மேல் வாங்க அனுமதியில்லை. ஆனால், இதில் துருக்கி, சிரியா மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவருக்கு மட்டும் விதிவிலக்கு உண்டாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications