பெற்றோர்களை கொலை செய்ய குழந்தைகளை மூளைச் சலவை செய்யும் ஐஎஸ் !
லண்டன்: தங்கள் சொந்த பெற்றோர்களை கொல்ல குழந்தைகளை ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மூளைசலவை செய்கிறது என்ற தகவல் ஐஎஸ் அமைப்பில் இருந்து தப்பி வந்த ஒரு சிறுவன் மூலம் வெளியாகியுள்ளது.
சிரியாவை முழுவதுமாக கைப்பற்றி தங்கள் ஆட்சியை நிலைநாட்டும் நோக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் தீவிர சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவ்வப்போது குழந்தைகள், பெண்களை பிணைக் கைதிகளாக கடத்திச் செல்வதும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் அறிவிக்கபடாத தலைநகரமான ராக்காவில் தற்கொலை படை பயிற்சி அளிக்கப்பட்ட 60 சிறுவர்களில் ஒருவனான 12 வயது நசீர், ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் இருந்து அண்மையில் தப்பி வந்து அகதிகள் முகாமில் இருந்த தன் குடுமபத்தோடு இணைந்தான்.

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் தான் இருந்த நாட்கள் குறித்து நினைவு கூர்ந்த நசீர் கூறியதாவது, "விமான படை தாக்குதல்கள் நடக்கும் போது எனக்கு மிகவும் அச்சமாக இருக்கும். ஐஎஸ் அமைப்பினர் எங்களை போன்ற பயிற்சியில் ஈடுபட்டுள்ள சிறுவர்களிடம் அமெரிக்கா எங்களை கொல்ல முயற்சிக்கிறது என்று கூறுவர்.
எங்கள் பெற்றோரை விட, எங்களை அவர்கள் நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் கூறுவார்கள். மேலும், எங்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியில், ஐஎஸ் அமைப்பு வலியுறுத்தும் இஸ்லாமிய கோட்பாடுகள் பற்றி நம்பிக்கையற்ற எங்கள் பெற்றோரை, நாங்கள் கொலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவார்கள்.
எங்களின் முதல் பணி எங்கள் பெற்றோரை கொலை செய்வதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுவார்கள்" என்று தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் நசீர் தெரிவித்தான். முன்னதாக ஐஎஸ் இயக்கத்திலிருந்து வெளியேற வலியுறுத்தி வந்த தாயை அவரது மகனே பொதுமக்கள் மத்தியில் கொன்ற சம்பவம் சிரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications