இங்கிலாந்து ராணி எலிசபெத்தை கொலை செய்ய ஐஎஸ் திட்டம்: திடுக் தகவல்
லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தை வரும் சனிக்கிழமை கொலை செய்ய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கை நியூஸ் மீடியா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் சதித்திட்டங்கள் குறித்து ரகசிய விசாரணை நடத்தியது. அதன் ஒரு பகுதியாக பகுதிநேர பத்திரிக்கையாளர் ஒருவர் ஜிஹாதில் ஈடுபாடு உள்ளது போன்று ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கதாபாத்திரத்தை கற்பனையாக உருவாக்கி ஆன்லைனில் தகவல்களை வெளியிட்டு வந்தார்.

ஜிஹாத் பற்றி அந்த கற்பனை கதாபாத்திரங்கள் வெளியிடும் தகவல்களை பார்த்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உண்மை என நம்பி அவர்களுக்கு தீவிரவாத செயல்களை நடத்த பணம் மற்றும் ஆயுதம் சேகரிப்பது குறித்த விளக்கம் அடங்கிய ஆவணங்களை அனுப்பி வைத்தனர்.
சிரியாவில் தீவிரவாதிகளை பணியமர்த்தும் ஜுனைத் ஹுசைன்(21) அந்த கற்பனை கதாபாத்திரங்களை உண்மை என நினைத்து அவர்களை ஆன்லைனில் தொடர்பு கொண்டுள்ளார். ஜுனைதின் மனைவி சாலி ஜோன்ஸ் பெண் தீவிரவாதிகளை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாலி தான் வரும் சனிக்கிழமை ஜாப்பானை வெற்றி கொண்ட தின கொண்டாட்டங்கள் நடக்கையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை கொலை செய்யும் திட்டத்தை அனுப்பி வைத்தார். தாக்குதலை நடத்த 2 முதல் 3 தீவிரவாதிகள் ஏற்கனவே இங்கிலாந்துக்குள் நுழைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் இங்கிலாந்தில் இருந்து ஆட்களை சிரியாவுக்கு அழைப்பதற்கு பதில் அவர்களை அங்கேயே தங்க வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதும் தெரிய வந்துள்ளு.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications