ஐ.எஸ் தீவிரவாதிகள் அட்டூழியம்: கைதியை சவக்குழி தோண்ட வைத்து கொன்று புதைத்த கொடூரம்
சிரியா: ஐ.எஸ் தீவிரவாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறைக்கைதியை சவக்குழியை தோண்டவைத்து அதிலேயே கொன்று புதைத்த சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோவையும் வெளியிட்டு காண்பவர்களின் நெஞ்சை உறையவைத்துள்ளனர் ஐ.எஸ். தீவிரவாதிகள்.
ஈராக் மற்றும் சிரியாவின் ஒருசில பகுதிகளை பிடித்து வைத்துள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அந்த பகுதிகளை இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளனர். சிறைபிடித்துச் சென்றுள்ள கைதிகளை மிகவும் கொடூரமாக கொலை செய்யும் அவர்கள், அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் வெளியிட்டு சர்வதேச சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது சிரியா உளவாளி என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருந்த ஒருவரின் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர். அதற்கு முன்னதாக, அவரை புதைக்கும் சவக்குழியை அவரை வைத்தே தோண்டச் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ பதிவு தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் பேசிய அந்த சிரியா கைதி தான் செய்த தவறு குறித்து பேசுகிறார். பின்னர், தனது விதியை எண்ணி சோகத்துடன் பாலைவனத்தில் நடந்து செல்லும் அவர் ஆரஞ்சு வண்ண உடையணிந்திருக்கிறார். தீவிரவாதிகள் உத்தரவின்படி தனக்கான சவக்குழியை மண்வெட்டி கொண்டு தானே தோண்டுகிறார்.
அப்போது ஒரு ட்ரக் வருகிறது. அதில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடி பறக்கிறது. பின்னர், டிரக்கில் வரும் தீவிரவாதிகள் அவரை அந்த குழியின் அருகில் மண்டியிட வைத்து மரண தண்டனையை நிறைவேற்றுகின்றனர். அத்துடன் அந்த வீடியோ முடிவடைகிறது. பின்னர் கைதி தோண்டிய குழியிலேயே புதைத்துவிட்டு சென்றுவிட்டனர் தீவிரவாதிகள். இந்த வீடியோகாட்சி காண்பவர்களின் நெஞ்சை உறையவைக்கிறது.
ஏற்கனவே அமெரிக்க செய்தியாளர்களை தலையை துண்டித்து கொன்று அதை வீடியோவாக வெளியிட்டு அச்சுறுத்திய நிலையில் சிரியா உளவாளியை கொன்று வீடியோ வெளியிட்டுள்ளனர் தீவிரவாதிகள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications