For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறுமியை விலைக்கு வாங்கி.. சித்ரவதை செய்த கொடூரன்.. காலில் சங்கிலியுடனே உயிரைவிட்ட பரிதாபம்..!

Google Oneindia Tamil News

பெர்லின்: 5 வயது சிறுமியை சித்ரவதை செய்தே கொன்றுள்ளார் ஒரு கொடூரன்.. அவருக்கு இப்போது ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

உலகம் முழுவதும் தீவிரவாதிகளின் பெருக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.. இதனால் அப்பாவி மக்களின் உயிர்களும் பறி போய் கொண்டிருக்கின்றன. இவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் அந்தந்த நாடுகள் தீவிரமாகி வருகின்றன.

ஈராக் மற்றும் சிரியா... இந்த இரண்டு நாடுகளிலும் யாஸிடி என்னும் சிறுபான்மை சமூகத்தினர் வாழ்ந்து வருகிறார்கள்.. இவர்கள் குருதீஸ் மொழி பேசுபவர்கள்..

 தீவிரவாதம்

தீவிரவாதம்

இந்த இரு நாடுகளிலுமே ஐஎஸ் தீவிரவாத இயக்கம் வலுவடைந்துள்ளது. இவர்கள், இந்த யாஸிடி இனத்தை சேர்ந்த ஆண்களை சிறைப்பிடித்து போவதும் அவர்களை கொடூரமாக கொல்வதும், பெண்களை வீட்டு வேலைக்காக அடிமைகளாக விற்பனை செய்தும் வந்தனர்..

 சிரியா

சிரியா

அந்த வகையில்தான் சிரியாவில், 5 வயது சிறுமி பரிதாபமாக சிக்கி கொண்டாள்.. வீட்டு வேலை செய்வதற்காக இந்த சிறுமியை விலைக்கு வாங்கி கொண்டு போயுள்ளார் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்.. அந்த பெண்ணுக்கு குடிக்க தண்ணீர்கூட கொடுக்காமல் சித்ரவதை செய்துள்ளான்.. அடிமையாக கட்டி வைத்துள்ளான்.. கடைசியில் சங்கிலியில் கட்டிவைக்கப்பட்ட நிலையிலேயே அந்த பிஞ்சு தன் உயிரைவிட்டு விட்டது..

 அதிகாரி

அதிகாரி

இந்த சம்பவம் 2 வருடங்களுக்கு முன்பு நடந்து, உலக நாடுகளுக்கே அதிர்ச்சியை தந்தது.. இதற்கு சர்வதேச சமூக அமைப்புகள் புகாரும் தெரிவித்தன.. அந்த புகாரில் அடிப்படையில் அந்த அதிகாரி தாஹா அல் ஜூமாலி மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர்.. இந்த இனப்படுகொலை ஜெர்மனி கோர்ட் விசாரித்து வந்தது. அதன்படி, நாடு கடத்தப்பட்டு கணவன், மனைவி 2 பேரும் ஜெர்மனி கொண்டு வரப்பட்டனர். யாஸிடி இனத்தை அழிக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாகவே 5 வயது சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டதும் பார்க்கப்படுகிறது..

 ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை

எனவே, இதனை இனப்படுகொலை என அறிவித்து, தாஹா அல் ஜூமாலிக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது ஜெர்மனி நீதிமன்றம். அவரது மனைவிக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது... மேலும் சிறுமியின் தாயாருக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது... யாஸிடி இனப்படுகொலை தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

English summary
ISIS terrorist convicted german court killing yazidi 5 year old girl war crimes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X