சிறுவர்கள் கையில் ஏ.கே.47... கைதிகளின் தலையை வெட்ட பயிற்சி... திகில் கிளப்பும் ஐஎஸ்ஐஎஸ் வீடியோ
டமாஸ்கஸ்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சிறு குழந்தைகளுக்கும் துப்பாக்கிச் சுடுதல், பணையக் கைதிகளின் தலைகளை வெட்டுதல் போன்றவற்றிற்கு பயிற்சி தரும் அதிர்ச்சித் தகவல் வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு இயங்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம், உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அந்த தீவிரவாத இயக்கத்தில் ஆட்கள் சேர்ந்து வருகின்றனர். இதனால் வேகமாக பலம் பெற்று வரும் அந்த தீவிரவாத இயக்கத்தை ஒழிக்க உலக நாடுகள் போராடி வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், சிறுவர்கள் கையில் ஏ.கே.47-ஐ ஏந்தி சுடுவதற்கு பயிற்சி பெறுவது போன்ற காட்சிகள் உள்ளன.
அதோடு, தங்களிடம் சிக்கும் பணையக் கைதிகளின் தலையை எவ்வாறு வெட்டுவது என குழந்தைகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பயிற்சி அளிக்கும் காட்சிகள் நெஞ்சை பதற வைக்கின்றன.
இந்த வீடியோவில் தோன்றும் சிறுவர்கள் தீவிரவாத உடையணிந்து, கைகளில் ஆயுதமுடன் பயிற்சி பெறுகின்றனர். ஈராக்கின் நைன்வே பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவிற்கு ‘தி பிளட் ஆப் ஜிகாத் 2' என தீவிரவாதிகள் பெயரிட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications