ஒரு கையில் துப்பாக்கி.. மறு கையில் குரான்.. ஷரியத் ஆட்சியை தீவிரமாக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்!!
மொசூல்: ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய நகரங்களில் உடனடியாக இஸ்லாமிய ஷரியத் ஆட்சியை அமல்படுத்துவதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஈராக்கின் பெரும்பாலான நகரங்களை சன்னி முஸ்லிம்கள் அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியுள்ளது. இந்த அமைப்பில் முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஆதரவாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

ஷரியத் ஆட்சி
தாங்கள் கைப்பற்றிய நகரங்கள் அனைத்திலுமே முன்னாள் அரசியல்வாதிகளான சதாம் கட்சியினரை வைத்து உடனடியாக இஸ்லாமிய நெறிமுறைப்படியான ஷரியத் ஆட்சியின் கீழான நிர்வாகத்தையும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உருவாக்கி இருக்கிறது.

மதகுருக்களுக்கு எச்சரிக்கை
மேலும் தங்களது அனுமதியின்றி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடக் கூடாது என்று மசூதிகளின் தலைமை மத குருமார்களுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்லாமிய சட்டம் அவசியம்
அத்துடன் தாங்கள் கைப்பற்றிய நகரங்களில் வசிப்போர் அனைவரும் இஸ்லாமிய சட்டங்களை அறிந்திருக்க வேண்டும் என்ற கட்டளையையும் ஐ.எஸ்.ஐ.எஸ். பிறப்பித்துள்ளது.

குரான்
தங்களது கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் சாலைகளில் பயணிப்போருக்கும் கூட இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை கட்டாயப்படுத்தி வழங்கி வருகின்றனர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்.

திரும்பும் மக்கள்
இப்படி சிவில் நிர்வாகம் செயல்படுவதைத் தொடர்ந்து மொசூல் உள்ளிட்ட பல நகரங்களை விட்டு வெளியேறியவர்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்களது வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications