ஈரானின் புது யுக்தி.. இஸ்ரேல் ஏவுகணைகள் அவற்றையே தாக்கிக் கொண்ட கொடூரம்.. நிலைகுலைந்த நெதன்யாகு
டெஹ்ரான்: ஈரான் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் ஒரே இரவில் 5 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஈரானில் வசிப்பவர்கள் விரைவில் இதற்கான விலையை கொடுப்பார்கள் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய முறையைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதால் அதிக இலக்குகளைச் சென்று அடைய முடிந்ததாக ஈரான் புரட்சிகரப் படை தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அயர்ன் டோமை முறியடித்து ஈரான் இந்த தாக்குதலை மேற்கொண்டு உள்ளது.

ஈரான் ஏவுகணை தாக்குதல்
ஈரான் ஏவுகணைகள் இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா துறைமுக நகரத்தை தாக்கியதில் வீடுகள் தரைமட்டமாகின. ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய முன்கூட்டிய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் கடுமையாக சேதம் அடைந்து உள்ளது. முக்கியமாக இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இங்கே ஏற்பட்ட சேதங்கள் பகல் நேர வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ஆரம்ப கட்ட தகவல்களின்படி, ஹைஃபாவில் உள்ள ஒரு ஜெப ஆலயம் சேதமடைந்துள்ளது. டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் உள்ள பென் குரியன் விமான நிலையமும் கடுமையாக சேதம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல் அவிவ் மீது பல ஏவுகணைகள் பறந்து சென்று வெடிப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. டெல் அவிவ்வின் குடியிருப்பு பகுதியில் நடந்த தாக்குதலில் பல கட்டிடங்கள் தரைமட்டமாகின. அமெரிக்க தூதரகத்திற்கு சில நூறு மீட்டர் தூரத்தில் இருந்த வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் தூக்கியடிக்கப்பட்டு இந்த தாக்குதலில் சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் தூதரகத்திற்கு சிறு சேதம் ஏற்பட்டதாகவும், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க தூதர் தெரிவித்தார்.
புதிய முறையை கையாண்ட ஈரான்
ஈரான் புரட்சிகரப் படையினர் கூறுகையில், இதில் புதிய முறையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளோம். பொதுவாக நாங்கள் அனுப்பும் ஏவுகணைகளை இஸ்ரேலின் அயர்ன் டோம் மரிக்கும். அல்லது மற்ற ஏவுகணை தடுப்பு அமைப்புகள் தடுத்து தாக்கும்.
ஆனால் இந்த முறை நாங்கள் வித்தியாசமான முறையில் தாக்குதல் நடத்தி உள்ளோம். சில ரேடார் நுட்பங்கள், புதிய முறைகளை பயன்படுத்தி உள்ளோம். அதேபோல் ஹீட் சென்சார்கள், ரேடார் தகவல்களை வைத்து இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்புகளை குழப்பி உள்ளோம். இதனால் அயர்ன் டோம் எங்களின் ஏவுகணையை தாக்க வந்தால்.. அந்த அயர்ன் டோம் ஏவுகணையை இஸ்ரேலின் நாட்டின் வேறு ஒரு ஏவுகணை தாக்கி அழிக்கும்.
அதாவது.. இஸ்ரேல் தனது சொந்த நாட்டு ஏவுகணை அமைப்புக்கு உள்ளேயே மாறி மாறி தாக்கிக்கொள்ளும் விதமாக குழப்பி உள்ளோம். தங்களின் சொந்த நாட்டு ஏவுகணை தடுப்பு அமைப்புகள் செயல்பட்டால் அதை அவர்களின் ஏவுகணை தடுப்பு அமைப்புகளே தாக்கி அழிக்கும். அதாவது கேன்சர் போல. நல்ல செல்களையும் கேன்சர் அழிப்பது போல.. அவர்களுக்கு உள்ளேயே குழம்பி தாக்கிக்கொள்வார்கள்.
இஸ்ரேலின் பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகள் ஒன்றுக்கொன்று இலக்காகித் தாக்கும்படி செய்ததால் எங்களால் பல இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்க முடிந்தது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை உடனடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இஸ்ரேலின் "அயர்ன் டோம்" பாதுகாப்பு அமைப்பு 100% வெற்றிகரமானது அல்ல என்று இதன் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது.
-
வேலையை காட்டும் டிரம்ப்! ஈரான் உடனான டீலிங்கில்.. திடீர் ட்விஸ்ட்! சீரியஸாகும் பஞ்சாயத்து! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி! -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
ஹார்முஸ் மூடினாலும் கவலையில்லை! பேக்கப் இருக்கு.. 'worst-case' வந்தால்.. ஹர்தீப் சிங் பூரி சொன்ன பதில்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications