அயர்ன் டோம் எல்லாம்.. இனி சும்மா! உள்ளே போய் தாக்கிய ஈரான் ஏவுகணைகள்.. இஸ்ரேல் சேதத்தை பாருங்க!
டெஹ்ரான்: இஸ்ரேல் விமானப்படை நடத்திய குண்டுவீச்சுக்கு பதிலடியாக, நேற்று இரவு இஸ்ரேல் மீது ஈரான் 4-வது கட்டமாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இதில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய தாக்குதலின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஹைஃபா, டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்களில் தீ
ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் கடுமையாக சேதம் அடைந்து உள்ளது. முக்கியமாக இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இங்கே ஏற்பட்ட சேதங்கள் பகல் நேர வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ஆரம்ப கட்ட தகவல்களின்படி, ஹைஃபாவில் உள்ள ஒரு ஜெப ஆலயம் சேதமடைந்துள்ளது. டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் உள்ள பென் குரியன் விமான நிலையமும் கடுமையாக சேதம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் முற்றி உள்ளது. இந்த போரின் ஒரு பகுதியாக நேற்று இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் சாதாரணமாக செய்யவில்லை. முறையாக திட்டமிட்டே இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இது வெறுமனே கோபத்தில் கொடுக்கப்பட்ட பதிலடி அல்ல.
இஸ்ரேலிடம் ஏவுகணைகளை மறித்து தாக்கும் அயர்ன் டோம் உள்ளது. அதாவது ஒரு ஏவுகணை உள்ளேவந்தால் .. அதை உடனடியாக இந்த அயர்ன் டோம் இடைமறித்து ஏவுகணை மறித்து வெடிக்க வைக்கும். ஆனால் இதை மீறி ஈரானின் ராக்கெட்டுகள் இஸ்ரேலை பதம் பார்த்து உள்ளது. இது சாத்தியமாக காரணம்.. ஈரான் உடனுக்குடன் அதிக அளவில் ஏவுகணைகளை அனுப்பியது. அயர்ன் டோம் தடுக்கும் என்றாலும் 10 நொடிக்கு 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஒரே நேரத்தில் வந்தால் அதனால் எதிர்கொள்ள முடியாது.
முக்கியமாக அயர்ன் டோம் முழுமையாக ஏவுகணைகளை பயன்படுத்திய பின் அடுத்த லோடிங் நடக்க 10 நிமிடங்கள் வரை கூட ஆகும். இடைப்பட்ட நேரத்தில் ஏவுகணைகள் வந்தால்.. அதை இஸ்ரேலால் தடுக்க முடியாது. இது போன்ற நேரங்களில் இஸ்ரேலின் மற்ற ஏவுகணை தடுப்புகள், அமெரிக்கா அளித்துள்ள ஏவுகணை தடுப்புகள் உதவும். ஆனால் இதை எல்லாம் மீறி இஸ்ரேல் உள்ளே புகுந்து ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
Tel Aviv in the day timepic.twitter.com/ulm2ekM3kO
— Jackson Hinkle 🇺🇸 (@jacksonhinklle) June 15, 2025
இதற்கு காரணம்.. ஈரான் ஒரே நேரத்தில் அதிக அளவில் ஏவுகணைகளை அனுப்பி உள்ளது. மொத்தமாக 2500க்கும் அதிகமான ஏவுகணைகளை நேற்று இஸ்ரேல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் அரணையே ஈரான் உடைத்து போட்டுள்ளது. ஈரான் கூற்றுப்படி.. 80% ராக்கெட்டுகள் இஸ்ரேலில் தாக்கி உள்ளன. இஸ்ரேல் 99% ராக்கெட்டுகளை தடுத்துவிட்டதாக கூறுகின்றன. ஆனால் வீடியோ ஆதாரங்களின் படி பார்த்தால் இஸ்ரேல் கடுமையாக அடி வாங்கி உள்ளது. ஏவுகணைகளை தடுக்கவில்லை என்பது புலனாகிறது.
மிக மோசமான சேதம்
ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் கடுமையாக சேதம் அடைந்து உள்ளது. முக்கியமாக இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.
-
குவைத் நாட்டில் ஈரானின் வெறியாட்டம்! விமான சேவை மொத்தமாக முடக்கம்.. ஜோர்டானில் மட்டும் 12 ஏவுகணைகள் -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர்












Click it and Unblock the Notifications