ஈரான் அழிய போகிறது.. இருப்பதை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.. டிரம்ப் விடுத்த பயங்கர வார்னிங்.. போச்சு
டெஹ்ரான்: அமெரிக்கா உலகின் மிகவும் கொடிய ஆயுதங்களை தயாரிக்கிறது, அவற்றில் பல இஸ்ரேலிடம் இருக்கிறது.. இஸ்ரேல் அதை ஈரான் மீது பயன்படுத்த தயங்காது.. இதனால் ஈரான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த போரை நாங்கள் தடுக்க மாட்டோம்.. ஈரானுக்கு 60 நாள் டைம் கொடுத்துவிட்டோம். இனி கொடுக்க முடியாது, என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தலைவர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு உடனே ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இல்லையெனில், ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள தாக்குதல்கள் இன்னும் கடுமையானதாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் எச்சரிக்கை
ட்ரம்ப் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில், "ஈரானுக்கு பலமுறை வாய்ப்பு கொடுத்தும் அவர்கள் எங்களுடன் ஒப்பந்தம் செய்யவில்லை. இனி அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ஏற்கனவே நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டுவிட்டன. இனியும் தாமதிக்காமல் இந்த நிலைமையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அடுத்த தாக்குதல்கள் மிகக் கொடூரமாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் நாட்டில் இப்போது தீவிரவாதிகள் அனைவரும் இறந்துவிட்டார்கள். ஈரான் அழிந்து போவதற்கு முன்பு ஒரு ஒப்பந்தம் செய்து, எஞ்சியிருப்பதையாவது காப்பாற்ற வேண்டும். இதுவரை நடந்த தாக்குதல் இது மிகச் சிறப்பாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தோம், அவர்கள் அதை எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டார்கள். அவர்கள் கடுமையாக தாக்கப்படுவார்கள். இன்னும் நிறைய இருக்கிறது
அமெரிக்கா உலகின் மிகவும் கொடிய ஆயுதங்களை தயாரிக்கிறது, அவற்றில் பல இஸ்ரேலிடம் இருக்கிறது.. இதனால் ஈரான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த போரை நாங்கள் தடுக்க மாட்டோம். ஈரானுக்கு 60 நாள் டைம் கொடுத்துவிட்டோம். இனி கொடுக்க முடியாது, என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் போர் பிரகடனம்
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி "கடுமையான பதிலடி" கொடுக்கப்படும் என்று சூளுரைத்துள்ளார். இஸ்ரேலுக்கு நடத்திய தாக்குதலை ஈரான் "போர் பிரகடனம்" என்று கூறியுள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் ஆயுதப்படைத் தலைவர் முகமது பாகேரி மற்றும் புரட்சிகர காவல்படைத் தலைவர் ஹொசைன் சலாமி ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், நடான்ஸ் அணு உலை விஞ்ஞானிகள் உட்பட ஆறு அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைத இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இந்த தாக்குதல்கள், ஈரானின் அணு உலைகள், ராணுவத் தளபதிகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை குறி வைத்தன. இந்த தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் தெரிவித்தார். இதற்குப் பதிலடியாக டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார், 34 பேர் காயமடைந்தனர்.
-
குவைத் நாட்டில் ஈரானின் வெறியாட்டம்! விமான சேவை மொத்தமாக முடக்கம்.. ஜோர்டானில் மட்டும் 12 ஏவுகணைகள் -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா!












Click it and Unblock the Notifications