ஈரானின் இதயத்தில் அடித்த இஸ்ரேல்.. கமனேி அலுவலகம் டூ பாதுகாப்பு அமைச்சகம் வரை.. கைகோர்த்த அமெரிக்கா
டெஹ்ரான்: ஈரான் மீது இன்று திடீரென்று இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரானின் பல்வேறு முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் ஈரானில் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலின் ஏவுகணைகள் ஈரான் தலைநகரில் பல இடங்களில் தாக்கியுள்ளது.

இதனால் ஈரான் - இஸ்ரேல் இடையே போர் வெடித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பான இடங்களில் பதுங்க வேண்டும் என்று ஈரான் அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
ஈரானின் இதயம்
இந்நிலையில் தான் இஸ்ரேல், ஈரானின் இதயப்பகுதியை குறிவைத்து அட்டாக் செய்துள்ளது. ஈரானை எடுத்து கொண்டால் தலைநகர் டெஹ்ரானில் தான் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அரசின் முக்கிய அலுவலகங்கள் இங்கு தான் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் இஸ்ரேல், ஈரானின் இதயப்பகுதியான டெஹ்ரானை குறிவைத்து தாக்கி உள்ளது.
கமேனியின் அலுவலகம்
அதன்படி டெஹ்ரானின் ஜோம்ஹரி சதுக்கம், ஹாசன் அபாத் சதுக்கம் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக டெஹ்ரானில் உள்ள ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தை குறிவைத்து 7 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணைகள் அலுவலகத்தின் காம்பவுண்ட்டை தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சேதங்கள் பற்றி .உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை. அயதுல்லா அலி கமேனி தற்போது சுரங்கத்துக்குள் ரகசியமாக பதுங்கி உள்ளார்.
100 டார்க்கெட்
அதேபோல் ஈரான் உளவுத்துறை அலுவலகம், காப்பு துறை அமைச்சகம், அணுசக்தி திட்டங்களின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் ஈரானின் சகாபர் கடற்கரை மற்றும் பெர்ஷியன் வளைகுடா கடற்பகுதிகளிலும் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் 100 இடங்கள் டார்க்கெட் செய்யப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா – ஈரான் மாறிமாறி...
இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கி உள்ளது. இதனால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க உள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதலை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக 30 ஏவுகணைகள் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவை நோக்கி ஈரான் அனுப்பி உள்ளது. இதனால் மீண்டும் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் வெடித்துள்ளது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications