எஸ்கேப்பான ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி.. இஸ்ரேல் தாக்குதலுக்கு நடுவே எங்கிருக்கிறார்?
டெஹ்ரான்: ஈரான் மீது இன்று திடீரென்று இஸ்ரேல் கொடூர தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் புதிய போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் எங்கிருக்கிறார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் நெருங்கிய நட்பு நாடுகள். இந்த 2 நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி கடந்த ஆண்டு இஸ்ரேல், அமெரிக்கா சேர்ந்து ஈரானை தாக்கியது. அதன்பிறகு சண்டை நின்றது.

இந்நிலையில் தான் இன்று திடீரென்று ஈரானை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தொடங்கி உள்ளது.
கமேனி அலுவலகத்தில் தாக்குதல்
டெஹ்ரானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 3 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டெஹ்ரானின் ஜோம்ஹரி சதுக்கம், ஹாசன் அபாத் சதுக்கம் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக டெஹ்ரானில் உள்ள ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
கமேனி எஸ்கேப்
இதன்மூலம் அயதுல்லா அலி கமேனியை இஸ்ரேல் குறிவைத்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் உண்மையில் அயதுல்லா அலி கமேனி தற்போது டெஹ்ரானில் இல்லையாம். அவர் ஈரானில் பாதுகாப்பான ஒரு இடத்தில் ரகசியமாக பதுங்கி உள்ளாராம். இதனை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
கமேனி எங்கு பதுங்கல்?
அதாவது ஈரான் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கோபமான டிரம்ப் ஈரான் மீது மோசமான தாக்குதல் நடத்தப்படும் என்று வார்னிங் செய்ததோடு, போர்க்கப்பல், போர் விமானங்களை வைத்து ஈரானை சுற்றி வளைத்தார்.
அதோடு ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்பதால் அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கருதி சுரங்கத்துக்குள் பதுங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் தற்போது ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications