இஸ்ரேல் விடாது போலயே.. ஈரானுக்கு எதிராக எடுத்த அவசர முடிவு.. இன்னிங்க்ஸ் 2 ஆரம்பம்.. போச்சு
ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டிற்கு எதிரான தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானுக்கு எதிரான மற்றொரு பதிலடி தாக்குதலை நடத்த இஸ்ரேலின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாம் கட்ட தாக்குதலை நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேலில் சிசேரியாவில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தனிப்பட்ட இல்லத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்கியதற்கு பதிலடியாக இந்த இரண்டாம் கட்ட தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. நேற்று நடந்த கூட்டத்தில் பதிலடி தாக்குதலை நடத்த இஸ்ரேலின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இரண்டு நாட்டு மோதல்: கடந்த 2 நாட்களுக்கு முன் ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீரென பங்கருக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
அதன்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் 2-3 இஸ்ரேலின் டாப் தலைவர்கள் பங்கரில் பதுங்கி இருந்துள்ளனர். பங்கரில் இருந்தபடியே இவர்கள் தாக்குதலை கண்காணித்துள்ளனர்.
பொதுவாக இது போன்ற பெரிய தாக்குதல் சமயங்களில் தலைவர்கள் பங்கருக்குள் செல்வது வழக்கம். அப்படிதான் பெஞ்சமின் நெதன்யாகு பங்கருக்குள் சென்று இருந்தார். அதோடு ஈரான் உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்தலாம்.. வானத்தில் விமானங்களை அனுப்பி டாக் பைட் நடத்தி இருக்கலாம்.. விமானங்கள் இஸ்ரேல் எல்லைக்குள் வரவும் வாய்ப்புகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்கப்பட்டது. இதற்கு அடுத்து பாதுகாப்பு கருதி.. பெஞ்சமின் நெதன்யாகு பங்கருக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரப்போவதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக ஈரான் ராணுவம் ட்விட் ஒன்று செய்துள்ளது. ஈரான் ராணுவம் சார்பாக செய்யப்பட்டுள்ள போஸ்டில், டிக் டாக்.. 3வது #TruePromise3 அட்டாக் என்று குறிப்பிட்டு உள்ளனர். முன்னதாக #TruePromise1 #TruePromise2 என்ற பெயரில் இஸ்ரேலில் ஒரே நாளில் ஈரான் இரண்டு கட்டமாக தாக்கியது. இதனால் 3வது கட்டமாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்க போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரான் நாட்டு அரசு தனது ராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டு உள்ளதாம். போர் தொடர்பாக முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாம்.
ஈரான் மீது இஸ்ரேலின் மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.
குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதல் தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்ரேல் வெளியிட்ட ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் ராணுவ தளங்களில் மட்டுமே கவனம் செலுத்தியது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல் மேலும் அதிகரிப்பதை தடுக்க அணு மற்றும் எண்ணெய் மையங்களை தவிர்த்து இஸ்ரேல் ஜாக்கிரதையாக தாக்குதல் நடத்தி உள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications