அகில உலகை அலற வைக்கும் ஹமாஸ் ஜிஹாதிகளின் 100 அடிக்கு கீழே 500 கி.மீ. நீள சுரங்கங்கள்..10 பாயிண்ட்ஸ்!

Subscribe to Oneindia Tamil

காஸா: உலகத்தில் யுத்தங்கள் உருவான காலத்தில் இருந்து பல்வேறு வியூகங்கள் கடைபிடிக்கப்படுவது வழக்கம்.. இந்த போர் வியூகங்களில் பல்லாயிரம் ஆண்டுகால புதிர்களை கொண்டவை சுரங்க பாதைகள்.

நிலக்கீழ் சுரங்க பாதைகள், மலை கோட்டைகளை குடைந்து நிலப்பகுதிக்கு சுரங்க பாதை, பல நூறு கிலோ மீட்டர் சுரங்கப் பாதை என்பவை எல்லாம் இன்றைக்கும் தமிழ்நாட்டின் அவிழ்க்கப்படாத மர்மங்களாக தொடருகின்றன. திண்டுக்கல் மலைக் கோட்டைக்கும் திருச்சி மலைக் கோட்டைக்கும் சுரங்க பாதை இருக்கிறது என்பது சிறுபிராயத்து 'அம்புலி மாமா' கதை.. திருச்செந்தூருக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்கும் சுரங்கப் பாதை இருப்பதாக புனைவு பாடல்கள் இருக்கின்றன... இவை எல்லாம் சாத்தியங்களா? என்ற எகத்தாள கேள்விகளுக்கு எல்லாமும் சாத்தியமாகத்தான் இருக்க முடியும் என்கிற பதிலைத் தருகின்றன பாலஸ்தீனத்தின் காஸாவில் 100 அடிக்கு கீழே ஹமாஸ் ஜிஹாதிகள் கட்டி அமைத்திருக்கும் சுமார் 500 கி.மீ நீள சுரங்க பாதைகள். இஸ்ரேலின் மொழியில் சொல்வதானால் இவை காஸா மெட்ரோ.

 Israel faces big Challenge on 500 Km Hamas Gaza tunnels-10 Points

கொரில்லா யுத்தம், மரபுவழி ராணுவ யுத்தம், முப்படைகள் யுத்தம் தாண்டி நிலக்கீழ் யுத்த பாணி அண்மைய வரலாறுகளில் அதிகம் பேசப்படாதவை.. இப்போது பாலஸ்தீன ஹமாஸ் ஜிஹாதிகள் மூலம் சர்வதேச அரங்கில் பேசு பொருளாகி இருக்கிறது 'நிலக்கீழ்' யுத்த பாணி. இது குறித்த சில முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.

1. 2021-ம் ஆண்டு இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் ஹமாஸ் ஜிஹாதிகளின் 100 கி.மீ நீள சுரங்க உறைவிடங்களை அழித்தொழித்துவிட்டோம் என்றது. ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான யாக்யா சின்வார், எங்கள் சுரங்க உறைவிடம் 500 கி.மீ. நீளம் கொண்டது. நீங்கள் அழித்தது வெறும் 5% என பிரகடனம் செய்தார். ஆக ஹமாஸ் ஜிஹாதிகளின் சுரங்கம் என்பது கட்டுக் கதை அல்ல. நிஜம் என்பது திட்டவட்டமானது.
2. ஹமாஸ் ஜிஹாதிகளின் சுரங்க உறைவிடம் எவ்வளவு பெரியது என்பதற்கு உதாரணமாக இப்படி சொல்லலாம்.. டெல்லி மெட்ரோ ரயில் நெட்வொர்க் மொத்தமே 392 கி.மீ நீளம் கொண்டது. இதனைப் போல பல மடங்கு நீளமானது ஹமாஸ் ஜிஹாதிகளின் சுரங்க உறைவிடம் எனில் எவ்வளவு பிரம்மான்டமானது என கற்பனை செய்து கொள்ளலாம்.
3. இஸ்ரேல் காஸாவில் பொதுமக்களின் கட்டிடங்கள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்களை குறிவைத்து அழிக்கிறது என்கிற கதறல்கள் ஒரு பக்கம். ஆனால் இஸ்ரேலோ, இந்த பொதுமக்களின் கட்டிடங்கள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்களின் கீழேதான்யா ஹமாஸ் ஜிஹாதிகளின் சுரங்க உறைவிடங்களே இருக்கின்றன என வாதிடுகிறது.
4. 2007-ம் ஆண்டு காஸாவை ஹமாஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அன்று தொடக்கம் இந்த பிரம்மாண்ட நிலக்கீழ் யுத்த பாணிக்கான சுரங்கங்களை கட்டமைத்து கொண்டே இருக்கிறது. இஸ்ரேலுக்குள்ளும் எகிப்துக்குள்ளும் நீண்டு போகிறதாம் ஹமாஸின் இந்த சுரங்க உறைவிடங்கள்.
5. இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந் தேதி ஹமாஸ் ஜிஹாதிகள் தொடங்கிய பல்லாயிரக்கணக்கான ஏவுகணைத் தாக்குதல்களில் இந்த சுரங்க உறைவிடங்கள் பெரும் பங்களிப்பு செய்திருக்கின்றன என்கின்றன சர்வதேச ஊடகங்கள். இஸ்ரேலுக்குள்ளும் நீண்டு கிடக்கும் யாரும் அறியாத சுரங்கங்கள் வழியாகவே சரமாரி தாக்குதல்கள், ஊடுருவல்களை ஹமாஸ் ஜிஹாதிகள் நடத்தி இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதும் கணிப்பாக இருக்கிறது.
6. கஹமாஸ் ஜிஹாதிகளின் இந்த சுரங்க உறைவிடங்கள் அதிநவீன வசதிகளால் நிரம்பிக் கிடப்பவை. ஒட்டுமொத்த ஹமாஸ் ஜிஹாதிகளின் வாழ்விடங்களாக, பாசறைகளாக, கட்டுப்பாட்டு அறைகளாக, போர் ஆலோசனைகள் நடக்கும் இடங்களாக பன்முகத்தன்மையுடன் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
7. காஸாவை ஹமாஸ் ஜிஹாதிகள் கையகப்படுத்தும் முன்னர் கடத்தல் தொழிலுக்காக சுரங்கங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த சுரங்கங்களை 'மாற்றி யோசி'த்து நிலக்கீழ் யுத்த களமாக்கிவிட்டனராம் ஹமாஸ் ஜிஹாதிகள்.
8. இஸ்ரேல் 'பயங்கரவாத சுரங்க உறைவிடங்கள்' என்றே இவற்றை அழைப்பது உண்டு. இதனாலேயே காஸா பகுதிக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு 2014-ல் இஸ்ரேல் தடை விதித்த ஒரு சரித்திரமும் இருக்கிறது.
9. அக்டோபர் 7 யுத்தம் தொடங்கிய போது ஹமாஸ் ஜிஹாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து சென்ற 100க்கும் மேற்பட்டோர் இத்தகைய சுரங்க உறைவிடங்களில்தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்பது இஸ்ரேலின் சந்தேகம்.
10. ஹமாஸ் ஜிஹாதிகளின் இத்தகைய சுரங்கங்கள் எங்கே தொடங்கி? எங்கே முடிக்கிறது? எங்கே வாயில்கள் இருக்கின்றன? எத்தனை நாடுகளைத் தொட்டு நிற்கின்றன? என்பதெல்லாம் எந்த உளவுப் படையாலும் 'மோப்பம்' பிடித்துவிடாத பெரும் புதிராகவே சுட்டிக்காட்டப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+