இஸ்ரேல் ஜெருசலேமில் மர்ம நபர் துப்பாக்கி சூடு.. யூதர்கள் வழிபாட்டு தளத்தில் கொடூரம்.. 7 பேர் பலி
கிழக்கு ஜெருசலேம் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை செய்வது வருவதற்கும், தாக்குதல் நடத்துவதற்கும் பதிலடியாக காஸாவில் உள்ள ஹமாஸ் போராளி குழு இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜெருசலேம்: இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெருசலேம் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 7 பேர் பலி பலியானார்கள்.
யூதர்கள் வழிபாட்டு தளத்திற்கு வெளியே நடத்த துப்பாக்கி சூட்டில் இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. நேவே யாகோவ் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு யூதர்கள் கூட்டம் நடத்தும், வழிபாடு செய்யும் வழிபாட்டு தளம் ஒன்று உள்ளது.

அந்த பகுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் இஸ்ரேல் நேரப்படி இரவு 8.30 மணிக்கு அங்கே சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். இந்திய நேரப்படி இரவு 12.30 மணிக்கு இந்த துப்பாக்கி சூடு நடத்து உள்ளது.
கையில் பெரிய மெஷின் துப்பாக்கியுடன் வந்தவர், அங்கு இருந்த யூதர்களை நோக்கி சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மக்கள் துடி துடித்து பலியானார்கள். அங்கு ஒளிந்து கொண்ட மக்கள் சிலர் உடனே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சம்பவ இடத்தில் அதன்பின் 20 நிமிடம் போலீசாருக்கும், அந்த மர்ம நபருக்கும் இடையில் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. சண்டையின் முடிவில் துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 4 குண்டுகள் துளைக்க அந்த மர்ம நபர் அங்கேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த துப்பாக்கி சூட்டில் மொத்தம் 7 பொதுமக்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஒரு போலீசார் காயம் அடைந்தார். இந்த தாக்குதல் ஒரு தீவுத்திரவாத் தாக்குதல். யூதர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. மதம், இன ரீதியான தாக்குதலாக இது இருக்கலாம் என்று இந்த தாக்குதல் குறித்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான மோதல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவும்கூட துப்பாக்கி சூட்டிற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜெருசலேம் கிழக்கு பகுதியில் இஸ்ரேல் கடந்த சில வாரங்களாக பல லட்சம் யூதர்களை குடியமர்த்தி அங்கிருந்து பாலஸ்தீன மக்களை வெளியேற்றுவதில் மும்முரம் காட்டியது. இதுவே தற்போது இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுக்க காரணம்.
கிழக்கு ஜெருசலேம் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை செய்வது வருவதற்கும், தாக்குதல் நடத்துவதற்கும் பதிலடியாக காஸாவில் உள்ள ஹமாஸ் போராளி குழு இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் காஸாவில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. காஸா - இஸ்ரேல் இடையிலான இந்த மோதல் கடந்த சில வாரங்களாக மிக தீவிரமாக, கிட்டத்தட்ட போருக்கு இணையாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் இந்த துப்பாக்கி சூடும் நடந்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications