முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்.. இன்று எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!
காசா: கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இந்த இரண்டாண்டு போரில் ஏறத்தாழ 60,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எனவே போர் நிறுத்தம் குறித்து பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தை இஸ்ரேலும், ஹமாஸும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து இரு தரப்பும் இன்று எகிப்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது.
20 அம்சங்கள் கொண்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட ஹமாஸ், தாங்கள் கைது செய்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதாக தெரிவித்திருக்கிறது. பதிலுக்கு தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், தற்காலிகமாக தாக்குதல்கள் நிறுத்தப்படும் எனவும் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

இதனையடுத்து அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறத்த ஒப்பந்தம் குறித்த இரு தரப்பும் இன்று எகிப்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன. பேச்சுவார்த்தை வெற்றிபெறும் பட்சத்தில், போர் நிறுத்தம் நிரந்தரமாக இருக்கும்.
பாலஸ்தீனம் மீதான தாக்குதல்
பாலஸ்தீன நிலப்பரப்பை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கான முயற்சிகளில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வந்தது. இதற்கு எதிராக கடந்த 2023ம் ஆண்டு அக்.7ம் தேதி பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த, போர் வெடித்தது. ஹமாஸை அழிப்பதுதான் தங்கள் நோக்கம் என்று இஸ்ரேல் கூறினாலும், இதுவரை கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள்தான். எனவே போரை கைவிட வேண்டும் என்று சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரிக்க தொடங்கியது.
வாய் வார்த்தையாக அமெரிக்காவும் போருக்கு எதிராக தன்னை காட்டிக்கொண்டாலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தம் தொடர்பாக தீர்மானங்கள் கொண்டுவரும்போதெல்லாம் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, தீர்மானத்தை அமெரிக்கா ரத்து செய்துவிடும்.
ஆனால் சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை நீண்ட நாட்களுக்கு இஸ்ரேலால் தாங்க முடியவில்லை. ஒரு காலத்தில் இஸ்ரேலின் நட்பு நாடாக இருந்தவை கூட தற்போது பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க தொடங்கிவிட்டன. இப்படியே போய்விட்டால் நம்மை ஒரு நாடு கூட மதிக்காது என்று உணர்ந்துக்கொண்ட அமெரிக்கா, போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் போரை நான்தான் நிறுத்தினேன் என்று சொல்லிக்கொள்ள டிரம்ப் ஆசைப்படுகிறார். இதற்காக அவர் நோபல் பரிசை கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
-
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"கோழைகள்.." கண்கள் சிவந்த டிரம்ப்.. நேட்டோவில் இருந்து வெளியேறும் அமெரிக்கா? சரமாரி பாய்ச்சல் -
முரண்டு பிடிக்கும் டிரம்ப்.. எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பிய டீல்? என்ன மேட்டர்












Click it and Unblock the Notifications