60 நாட்கள் போர் நிறுத்தம்.. தயாராகும் இஸ்ரேல்! சிஐஏ+மொசாட் தலைவர்களுடன் கத்தார் பேச்சுவார்த்தை
பாரிஸ்: கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல்-பாலஸ்தீன போர், தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் விரைவில் இரண்டாவது முறையாக தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பிரான்ஸில் சிஐஏ, மொசாட் மற்றும் கத்தார் பிரதமர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பாலஸ்தீனத்திற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை தொடுப்பதும் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்கள்தான். இந்த மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது.

இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக அரபு நாடுகளும், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளும் தொடர்ந்து முயன்று வருகின்றன. ஆனால், போர் பல்வேறு நாடுகளுக்கு நீடிக்கும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக செங்கடல் பகுதியில் வரும் சரக்கு கப்பல்களை ஈரானின் ஹவுதி படைகள் தாக்குவதால், அமெரிக்காவும், பிரிட்டனும் ஈரான் மீது தாக்குதலை தொடுத்திருக்கிறது. இந்த தாக்குதலுக்கு இருநாடுகளும் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும் என ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் மத்திய தரைக்கடல் பகுதிக்கு போர் நீடிக்கும் அபாயம் எழுந்திருக்கிறது.
இது இப்படியே போனால் சரிபட்டு வராது என உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன. எனவே போரை நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதத்தில் நார்வே நாட்டில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்டப்டது. ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பாரிஸில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில், சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ், மொசாட் தலைவர் டேவிட் பார்னியா, ஷின் பெட் தலைவர் ரோனென் பார், கத்தார் பிரதம மந்திரி முகமது அல்-தானி மற்றும் எகிப்திய புலனாய்வு சேவைகளின் தலைவர் அப்பாஸ் கமல் என முக்கிய நபர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இந்த முறை 60 நாட்கள் போர் நிறுத்தம் நீடிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான முடிவை நோக்கி பேச்சுவார்த்தை நகர்ந்துக்கொண்டிருப்பதாக சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரவிக்கின்றன.
முதல் 30 நாட்கள் போர் நிறுத்தத்தின்போது வயதான பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அடுத்த 30 நாட்களில் பெண் கைதிகள், காயமடைந்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள். பணய கைதிகளை விடுவிப்பது 3 கட்டங்களாக நடக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இவை சாத்தியமாக வேண்டும் எனில், முதலில் போர் நிறுத்தம் சாத்தியப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications