ரிசல்டுக்கு முன்பே ரெடியாகும் இஸ்ரேல் IDF.. ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை-க்கு மத்தியில் பரபரப்பு!
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்துக்கு மத்தியில், இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) ஈரானுடன் மீண்டும் போர் துவங்கினால் எப்படி செயல்பட வேண்டும் என்பதை திட்டமிட துவங்கியுள்ளது. பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை ஆய்வு செய்து தயார்படுத்தும் நிலைக்கு இஸ்ரேல் ராணுவம் வந்துள்ளதாக சேனல் 12 தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், தாக்குதல் தொடங்கும் வாய்ப்பையும் IDF கருத்தில் கொண்டு IDF தயாராகி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையேயான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நாளை இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளது.

ஜேடி வான்ஸ் பயணம்
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் புறப்பட உள்ளார். ஈரானுடன் போரை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தம் குறித்து 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்க குழுவிற்கு ஜேடி வேன்ஸ் தலைமை தாங்குகிறார்.
மேலும் இந்த கூட்டத்திற்கு ஈரான் தரப்பில் இருந்து அதிகாரிகள் வரமாட்டார்கள் என ஈரான் அரசு கூறப்பட்டு வந்த நிலையில், வெள்ளை மாளிகையும் ஈரான் இந்த கூட்டத்தில் பங்கேற்குமா என்பதற்கான உறுதியான தகவலை எதிர்பார்த்து இருந்தது.
இந்த நிலையில் இரு நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தையில் மீடியேட்டராக இருக்கும் பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி நாடுகளின் முயற்சியால் ஈரான் தலைமை இக்கூட்டத்தில் பங்கேற்பதாக ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப், ஈரான் போர் நிறுத்தம் அறிவிப்பை மீண்டும் நீட்டிப்பது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளார். இந்த போர் நிறுத்தம் புதன்கிழமை மாலை அமெரிக்க நேரப்படி முடிவடைய உள்ளது. இந்த சூழலில், பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா என்பதை உலக மக்கள் எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் புதன்கிழமை மாலைக்குள் இந்த பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்படவில்லை எனில் மீண்டும் போர் தாக்குதல், ஹார்முஸ் முடக்கம் என அனைத்தும் கையை மீறிபோகும் நிலை உள்ளது.
IRGC படை
இதேவேளையில் ஈரானின் புரட்சிகர பாதுகாவலர் படை (IRGC) தீவிரமான நிலைப்பாட்டை வலியுறுத்தி வருவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஹார்முஸ்-ஐ ஈரான் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஹார்முஸ்-ல் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் வரையில் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மீடியேட்டர் நாடுகளின் தொடர் முயற்சியால் பேச்சுவார்த்தைக்கு ஈரான் தலைமை இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், மத்திய கிழக்கில் அமைதி நிலைக்க வாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் இஸ்ரேல் 2 முனையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறது. ஈரான் மீதும் லெபனான் மீதும் ஓரே நேரத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இரு நாடுகள் மீதும் தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் போர் மீண்டும் துவங்கினார் ஈரான் ஹார்முஸ் நீரிணை மட்டும் அல்லாமல் யெமன் நாட்டு அருகில் இருக்கும் பால் அல் மண்டப் வழித்தடத்தையும் முடக்க திட்டமிட்டு வருகிறது.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications