ஆபத்தில் இஸ்ரேல்.. டெல் அவிவ் நகரில் அணு குண்டு வெடிப்பு! ஏஐ போட்டோவை பகிர்ந்து பதற வைத்த நெதன்யாகு

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேலில் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு, தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட புகைப்படம் மொத்த இஸ்ரேலையும் பதற வைத்துள்ளது. டெல் அவிவ் நகரில் அணு குண்டு வெடிப்பது போன்ற ஏஐ புகைப்படத்தை பகிர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானால் ஏற்பட்டுள்ள ஆபத்தை களைய டிரம்பின் பதவிக்காலத்தில் எஞ்சியுள்ள 2 ஆண்டுகளை இஸ்ரேல் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் மோதலுக்கு நடுவே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஏஐ புகைப்படம் இஸ்ரேலியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Israel in danger Nuclear Blast in Tel Aviv Benjamin Netanyahu shared an AI photo

அணு குண்டு தாக்குதல் நடத்துவது போல

டெல் அவிவ் நகரத்தின் மீது அணு குண்டு தாக்குதல் நடத்துவது போலவும் மிகப்பெரிய தீப்பிழம்புகள் மொத்த நகரத்திலும் எழுவது போன்ற செயற்கை நுண்ணறிவை படத்தை பகிர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவிக்காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. அதற்குள் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட பதிவில், "மக்கள் நெருக்கமாக வசிக்கும் நகரத்தின் மீது மிகப்பெரிய அணு குண்டு வெடிப்பு ஏற்பட்டு, புகை மண்டலம் எழுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படத்துடன் இஸ்ரேலிய எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான யுவால் புளம்பெர்க் எழுதிய பதிவு ஒன்றையும் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நமக்கு எஞ்சியிருக்கும் காலம் இதுதான்

"இஸ்ரேலின் இருப்புக்கே ஆபத்தான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களைப் பெற்றுவிட்டால், அதன் பிறகு எதுவும் முன்பு இருந்ததைப் போல இருக்காது. ஈரான் அச்சுறுத்தலுடன் ஒப்பிடும்போது, மற்ற அனைத்துப் பிரச்சினைகளும் முக்கியத்துவம் குறைந்தவையே. அவ்வப்போது திட்டமிட்டு உருவாக்கப்படும் போலியான சர்ச்சைகள், மிக முக்கியமான ஒரே விஷயத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே நடத்தப்படுகின்றன" என்பதாக அந்த பதிவு உள்ளது.

அதோடு பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட மற்றொரு பதிவில், "டிரம்ப் ஈரானில் தனது பணியை முடிப்பதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. அதற்கு பிறகு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. கமலா ஹாரிஸா அல்லது வேறு யாரேனுமா தெரியவில்லை. இஸ்ரேலின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்குத் தேவையான பணிகளை நிறைவு செய்ய நமக்கு எஞ்சியிருக்கும் காலம் இதுதான். இந்த இலக்கை அடைவதற்குத் தேவையான அரசின் அனைத்து வளங்களும் இந்தப் பணிக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்" என்று நெதன்யாகு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் நாளை தேர்தல்

இஸ்ரேலில் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்த பதிவு, அந்த நாட்டில் அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெஞ்சமின் நெதன்யாகுவின் சமூக வலைத்தள பதிவுக்கு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தேர்தலுக்கு முன்பாக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நெதன்யாகு செயல்படுவதாகக் எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்கோட் குற்றம் சாட்டியுள்ளார்.

அணுகுண்டு தாக்குதல் போன்ற படத்தை பிரதமரே வெளியிட்டிருப்பது கவலைக்குரியதும் எனவும் விமர்சித்துள்ளனர். இஸ்ரேலில் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைப்படி வாக்குப்பதிவு நடைபெறும். 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்கு 61 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+