இஸ்ரேலுக்கு விழும் அடி.. ஈரானில் இருந்து சீறிப்பாயும் ஏவுகணைகள்.. கமேனியின் உதவிக்கு போன ஹவுதிகள்
டெஹ்ரான்: ஈரான் மீது இன்று திடீரென்று இஸ்ரேல் கொடூரமான தாக்குதல தொடங்கி உள்ளது. ஈரானின் பல்வேறு முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் அமெரிக்காவும் கைகோர்த்து ஈரானை அட்டாக் செய்து வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானுக்கு ஆதரவாளர் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகளும் இஸ்ரேல்லை குறிவைத்து தாக்கி வருகின்றன. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலின் ஏவுகணைகள் ஈரான் தலைநகரில் பல இடங்களில் தாக்கியுள்ளது.

ஈரானை எடுத்து கொண்டால் தலைநகர் டெஹ்ரானில் தான் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அரசின் முக்கிய அலுவலகங்கள் இங்கு தான் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் இஸ்ரேல், ஈரானின் இதயப்பகுதியான டெஹ்ரானை குறிவைத்து தாக்கி உள்ளது.
கமேனி அலுவலகம்
அதன்படி டெஹ்ரானில் உள்ள ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தை குறிவைத்து 7 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் அலுவலகத்தின் காம்பவுண்ட்டை தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அயதுல்லா அலி கமேனி தற்போது சுரங்கத்துக்குள் ரகசியமாக பதுங்கி உள்ளார்.
எந்தெந்த இடங்கள்?
அதேபோல் ஈரான் உளவுத்துறை அலுவலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு துறை அமைச்சகம், அணுசக்தி திட்டங்களின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் ஈரானின் சகாபர் கடற்கரை மற்றும் பெர்ஷியன் வளைகுடா கடற்பகுதிகளிலும் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கி உள்ளது. அமெரிக்காவின் ஏவுகணைகள் ஈரானை பதம் பார்த்து வருகின்றன.
இஸ்ரேல் மீது ’அட்டாக்’
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் கடும் பதிலடி தாக்குதலை தொடங்கி உள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதலை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக 30 ஏவுகணைகள் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரை நோக்கி சீறிப்பாய்ந்துள்ளது.
இந்த வேளையில் ஈரானின் ஆதரவு அமைப்பான ஹவுதிகளும் இஸ்ரேலை தாக்க தொடங்கி உள்ளன. ஹவுதிகள் ஏமனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த ஹவுதிகளின் ஈரானின் சப்போர்ட்டில் செயல்பட்டு வருகின்றன.
களமிறங்கிய ஹவுதிகள்
இந்நிலையில் தான் ஹவுதிகளும் செங்கடல் பகுதியில் இஸ்ரேல்,கப்பல்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரானை தாக்குவது போல் ஈரானுடன் சேர்ந்து ஹவுதிகளும் இஸ்ரேலை தாக்க தொடங்கி உள்ளன. ஈரானுக்கு ஆதரவாக இதற்கு முன்பு ஹவுதிகள் செங்கடல் பகுதியில் இஸ்ரேல், அமெரிக்க வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் இப்போது மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளன.
இதனால் மத்திய கிழக்கில் பெரிய போர் வெடித்துள்ளதோடு, பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் பல நாடுகளும் தங்களின் வான்வெளி பரப்பை மூட தொடங்கி உள்ளன. பல நிறுவனங்கள் மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளன.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்! -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
லீக்கான அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்.. அட இதெல்லாம் இருக்கா.. ஈரானுக்கு இனி ராஜவாழ்க்கை! -
ராஜா மாதிரி மீண்டும் தலையெடுக்கும் ஈரான்.. ஹார்மூஸ் வழியாக 3 ஈரானிய கப்பல் 'அவுட்'! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
இஸ்ரேல் தேரை இழுத்து தெருவில் விட்டது.. லெபனான் மீது 84 முறை தாக்குதல்.. ஈரான் உச்சக்கட்ட கோபம்! -
இனி ஒருபோதும் பாலஸ்தீனம் தனி நாடாக உருவாகாது! சர்வதேச விதியை மீறி இஸ்ரேல் எடுத்த நடவடிக்கை! -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி! -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்!












Click it and Unblock the Notifications