Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது ரொம்பவே ஆபத்து! லெபனான் & சிரியா மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. பெரிதாகும் போர்?

Subscribe to Oneindia Tamil

அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் பல வாரங்களாகத் தொடரும் நிலையில், இது பிராந்திய போராக விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த அக். 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் மோசமான தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு முன்பும் இரு தரப்பிற்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளது என்ற போதிலும், இந்தளவுக்கு ஒரு மோசமான தாக்குதல் இஸ்ரேல் மீது நடந்ததே இல்லை.

 Israel is now attacking Lebanon terror cell and Syria military bases

ஏவுகணை தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் நாட்டில் நுழைந்தும் தாக்குதல் நடத்தினர். மேலும், பலரைப் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இஸ்ரேல்: இந்தத் தாக்குதலை இஸ்ரேல் துளியும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை. இருப்பினும், ஒரு மாதிரி சுதாரித்துக் கொண்டு இஸ்ரேல் மீண்டும் பதிலடி கொடுக்க தொடங்கியது. காசா மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல காசா மீது படையெடுப்பு நடத்தவும் இஸ்ரேல் ரெடியாகி வருகிறது. இதன் காரணமாகவே ஹமாஸ் படை அதிகம் இருக்கும் பகுதியாக நம்பப்படும் வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் உத்தரவிட்டு வருகிறது.

அதேநேரம் படையெடுப்பு நடந்தால் இந்தப் போர் பிராந்தியம் முழுக்க பரவும் அபாயமும் இருக்கிறது. இதன் காரணமாகவே அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் படையெடுப்பு வேண்டாம் எனத் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. மேலும், போருக்கு மத்தியில் சுமார் 30க்கும் மேற்பட்ட டிரக்குகளில் உதவி பொருட்கள் காசாவிற்குள் நுழைந்தன. இது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த பிராந்தியம் முழுக்க போர் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

லெபனான்: லெபனான் எல்லையில், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேலின் ஆளில்லா டிரோன் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.. ஹிஸ்புல்லா அமைப்பு இதுபோல இஸ்ரேல் டிரோன் விமானத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

இதற்கிடையே இஸ்ரேலும் கூட லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாத செல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு இஸ்ரேலில் இருந்து லெபனானை நோக்கிப் பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.. ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத செல்கள் மற்றும் ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிரியா: முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் சிரியா மீதும் தாக்குதல் நடத்தியிருந்தது.. சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவில் உள்ள ராணுவ உள்கட்டமைப்பு குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அச்சம்: இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் தொடங்கியது முதலே அவ்வப்போது ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. அதேபோல அவ்வப்போது சிரியாவும் இஸ்ரேலை விடாமல் தாக்கி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தே வருகிறது. இதனால் எங்கே போர் அந்த பிராந்தியம் முழுக்க பரவுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் இஸ்ரேல் நேரடியாக லெபனான் மற்றும் சிரியாவை தாக்குவது பகீர் கிளப்புவதாகவே இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+