இஸ்ரேல் இறக்கிய "டிராகன்".. 1 நொடியில் எரிந்து பொசுங்கிய மக்கள்.. கேட்கவே பதறுதே.. போச்சு!
டெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர்ச்சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் ஈரான் மீது பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது இஸ்ரேலுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை பாஸ்பரஸ் பயன்பாடு - மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கை
காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளில் வெள்ளை பாஸ்பரஸை பயன்படுத்துவதால், பொதுமக்கள் கொடிய மற்றும் நீண்டகால காயங்களுக்கு ஆளாகிறார்கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது. இதனால், மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து மரணமடைகின்றனர் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
காசா நகர துறைமுகம் மற்றும் ஈரான் எல்லையில் உள்ள கிராமப்புற பகுதிகளில் பீரங்கிகளால் வீசப்பட்ட குண்டுகளில் வெள்ளை பாஸ்பரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை பாஸ்பரஸ் என்றால் என்ன?
வெள்ளை பாஸ்பரஸ் என்பது மனிதர்களையும், உடமைகளையும் எரிக்கும் தீயை உருவாக்கும் திறன் கொண்டது. இது விரைவாக தீப்பற்றி எரியும் தன்மை கொண்டது. மேலும், நச்சுத்தன்மை வாய்ந்த புகையை வெளியிட்டு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது உடனடி மரணத்தை ஏற்படுத்தாமல், சில நாட்களுக்கு கடுமையாக பாதித்து மரணத்தை உண்டாக்கும் திறன் கொண்டது. பொதுவாக பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்படும் இந்த வேதிப்பொருள், குண்டுகளில் பயன்படுத்தப்படும்போது உயிரை வதைத்து கொல்லும் கொடிய ஆயுதமாக மாறுகிறது.
வெள்ளை பாஸ்பரஸ் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் பயன்படுத்தப்பட்டால், அது கடுமையான தீக்காயங்களையும், வாழ்நாள் முழுவதும் தொடரும் நோய்களையும் உண்டாக்கும். குறிப்பாக குழந்தைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நுரை தள்ளி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் காசா நகரில் அல்-மினா பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களிடம் தொலைபேசி மூலம் விசாரணை நடத்தியது.
அந்த விசாரணையில், இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக இஸ்ரேல் மீது சர்வதேச அளவில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் பாஸ்பரஸ் குண்டு பயன்பாடு குற்றச்சாட்டு
இந்தச் சூழலில், இஸ்ரேல் - ஈரான் போர் விவகாரம் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேல் அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. இதனால், இஸ்ரேல் ஈரான் மீது பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இஸ்ரேல் ஈரான் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் போது பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
பாஸ்பரஸ் இஸ்ரேல்
முன்னதாக லெபனானுக்குள் நுழைய முயன்ற இஸ்ரேலின் ஈகோஸ் சிறப்புப் படைப் பிரிவு பின்வாங்கியது. இஸ்ரேலின் எலைட் படைப்பிரிவான ஈகோஸ் சிறப்புப் படைப் பிரிவு ஈரான் உள்ளே ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்றது.
அவர்களை தடுக்கும் விதமாக ஈரான் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். தரைவழி தாக்குதல் என்பது ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா பாணி. அதனை இஸ்ரேல் செய்ய முயன்று தோல்வியடைந்தது. ஹிஸ்புல்லாவுடன் நடந்த சண்டையில் பல இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். மீதமிருந்த வீரர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இஸ்ரேல் வீரர்களை துப்பாக்கியால் சுட்டும், கையால் தாக்கியும், கையெறி குண்டுகளை வீசியும் ஹிஸ்புல்லா படை வீரர்கள் கொன்றனர். இதனால் பயந்த இஸ்ரேல் வீரர்கள் வேறு வழியின்றி லெபனானில் இருந்து வெளியேறினர். லெபனானில் இருக்கும் தெற்கு எல்லைப் பகுதியை ஊடுருவ முயன்று இஸ்ரேல் தோல்வியடைந்தது. வடகிழக்கு எல்லை கிராமங்களுக்குள் நுழைய முயன்ற இஸ்ரேலிய வீரர்களை திரும்பப் பெறும் நிலை ஏற்பட்டது.
இஸ்ரேல் ஈரான் மீது பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் லெபனானில் ஏற்பட்ட பின்னடைவு ஆகியவை இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
-
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications