இதுவரை இல்லாத அளவுக்கு வான்வழி தாக்குதல்.. காசா மீது குண்டு மழை பொழியும் இஸ்ரேல்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: 21 வது நாளாக இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு காசா மீது வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த 7 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை பாய விட்டது ஹமாஸ் அமைப்பு. காசா முனையில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை தாக்குதலால் திக்குமுக்காடிப்போன இஸ்ரேல், சுதாரித்துக் கொண்டு பதில் நடவடிக்கையை ஆரம்பித்தது. அப்போது முதல் கிட்டத்தட்ட ஒரு வாரத்தை நெருங்கி போர் இரு தரப்பினருக்கும் இடையே நீடித்து வருகிறது. 21 வது நாளாக இஸ்ரேல் -ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நீடித்து வருகிறது.

Israel launches massive strikes across northern Gaza tonight most intense since the start of the war

போர் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இஸ்ரேலின் தீவிர தாக்குதலால் காசாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதனிடையே, கடந்த 7 ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்துள்ளது.

காசாவின் வடக்கு பகுதியில் மிகக் கடுமையான தாக்குதல் இன்று இரவு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காசா முனையில் இணைய சேவை துண்டிக்கப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. காசா உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இது குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறும் போது, காசா முனையில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+