Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல் எறிந்த ஹமாஸ்..கண் சிவந்த நெதன்யாகு! காசாவில் தாறுமாறாக விழுந்த குண்டுகள்! பின்னணியில் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களின் தலையீட்டால் ஏற்பட்ட அமைதி பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, காசா - மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி ஹமாஸ் நடவடிக்கைக்கு பதிலடியாக, காசா பகுதியில் தீவிரமான சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்துமாறு இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு இஸ்ரேல் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். காசா அமைதி தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த சில அறிவுறுத்தல்களை ஏற்க முடியாது என ஹமாஸ் அமைப்பு கூறி இருந்த நிலையில் தக்க பதிலடி தரப்படும் என டொனால்ட் டிரம்ப் கூறியிருந்ததால், இந்த தாக்குதலின் பின்னணியில் அமரிக்கா இருப்பதாக கூறப்படுகிறது.

தெற்கு காசா பகுதியில் அமைதியாக இருந்த சூழல் நேற்று மாலையிலிருந்து மீண்டும் பதற்றம் மிகுந்ததாக மாறியுள்ளன. அங்கு இஸ்ரேல் படைகளின் மீது ஹமாஸ் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சம்பவம், கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல தணிந்திருந்த போர் சூழ்நிலையை மீண்டும் பரபரப்பாக்கியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், " ராணுவ உயர் அதிகாரிகள் உடனான பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர், காசா பகுதியில் உடனடியாக சக்தி வாய்ந்த தாக்குதல்களை நடத்துமாறு பிரதமர் நெதன்யாகு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். ஹமாஸ் தொடர்ந்து விதிமீறல்களைச் செய்து வருவது ஏற்றுக் கொள்ள முடியாதது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Israel Gaza Hamas

இஸ்ரேல் தாக்குதல்

இந்த உத்தரவு வெளிவந்த சில மணி நேரங்களுக்குள், காசா நகரின் பல பகுதிகளில் பெரிய அளவிலான வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக அங்குள்ள உள்ளூர் மக்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதேவேளையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹமாஸ் பிடியில் இருந்த ஒரு இஸ்ரேல் பணயக்கைதியின் உடல் பாகங்களை சமீபத்தில் ஹமாஸ் ஒப்படைத்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

ஹமாஸ் மோதல்

இது, போர் நிறுத்த ஒப்பந்த விதிகளுக்கு எதிரான நேரடி மீறல் என நெதன்யாகு கடுமையாக கண்டனம் தெரிவித்தார். மேலும், ஹமாஸ் அமைப்பு மனிதாபிமான ஒப்பந்தங்களையே மதிக்கவில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதற்கு நாம் மௌனம் காக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார். இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களுக்குள், ஹமாஸ் அமைப்பும் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. அதில், செவ்வாய்க்கிழமை மாலை இன்னொரு பணயக்கைதியின் உடலை ஒப்படைக்க இருந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இதனால் காசா பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் வெடித்துள்ளது.

போர் நிறுத்தம்

சமீபத்தில் எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் அமைதி முயற்சிகளால் சிறிதளவு அமைதி நிலவியது. ஆனால் ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நெதன்யாகு உத்தரவுக்குப் பிறகு, காசா மீது நடைபெறும் தாக்குதல்கள் பெரிய அளவில் நடத்தக் கூடும் என சர்வதேச ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியம் மீண்டும் முழுமையான போருக்குள் தள்ளப்படும் அபாயம் நிலவுவதாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இரு தரப்பினருக்கும் அமைதியை வேண்டி அழைப்பு விடுத்துள்ளன.

அமெரிக்க தலையீடு

காசா அமைதி தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த சில அறிவுறுத்தல்களை ஏற்க முடியாது என ஹமாஸ் அமைப்பு கூறி இருந்த நிலையில் தக்க பதிலடி தரப்படும் என டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். மேலும் இஸ்ரேல் பிரதமர் நென்யாகவும் அதேபோல் பேசி இருக்கும் நிலையில் ஹமாஸ் மீது திட்டமிட்டு வேண்டுமென்றே பழி சுமத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+