மோடி அதிசயம் செய்வார்.. பாலஸ்தீன போரில் இஸ்ரேல் சொன்ன முக்கிய வார்த்தை.. திரும்பும் உலக நாடுகள்
இஸ்ரேல்: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான யுத்தத்தில் பிரதமர் மோடி அதிசயம் செய்வார். பிரதமர் மோடி சொன்னால் அவரது கைவிரல்களை பிடித்து செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் என இஸ்ரேல் ராணுவ பிரிவின் உளவுத்துறை முன்னாள் தலைவர் அமோஸ் யாட்லின் கூறி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே இன்று 4வது நாளாக யுத்தம் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கார், மோட்டார் சைக்கிள், பாராசூட்டில் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்கு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. பாலஸ்தீனம் உடனான போர் தொடங்கி உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்து தாக்குதலை தொடங்கி உள்ளார். காசா பகுதியில் போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் குண்டுகளை வீசி வருகிறது.
இதனால் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போர் என்பது உச்ச நிலையை அடைந்துள்ளது. இந்த தாக்குதலில் தற்போது வரை இருதரப்பையும் சேர்ந்த 1,600க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும் 6000 பேர் காயமடைந்துள்ளனர். குழந்தைகள், பெண்களும் பலியாகி உள்ளதோடு, ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
மேலும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தாக்குதலில் நடத்தியதால் முதல் நாளில் இஸ்ரேலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. அதன்பிறகு இஸ்ரேல் சுதாரித்து கொண்டு காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே தான் இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒவ்வொரு நாடுகளும் இறங்கி உள்ளன. இதனால் போர் என்பது முடிவுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நம் நாடான இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது. இன்று கூட பிரதமர் மோடி இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசி போர் சூழல் குறித்த கேட்டறிந்தார். மேலும் இந்த இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே தான் தற்போது நடக்கும் யுத்தத்துக்கு இஸ்ரேல் உளவுத்துறையின் தோல்வி முக்கிய காரணமாக கூறப்படுகிறது. உலகில் சிறந்த உளவுத்துறையை இஸ்ரேல் கொண்டுள்ள நிலையில் ஹமாஸ் அமைப்பின் தாக்குதலை குறித்து அறிவதில் தோல்வியடைந்துள்ளது.
இஸ்ரேலின் ஷின் பெட் மற்றும் மொசாட் உளவுத்துறை சந்தித்த பின்னடைவு பற்றி இஸ்ரேல் ராணுவ உளவுத்துறையின் முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் அமோஸ் யாட்லின் என்டிடிவிக்கு சிறப்பு பேட்டியளித்தார். இஸ்ரேல் உளவுத்துறை தோல்வி குறித்து அவர் விளக்கினார். இந்த வேளையில் இந்தியா குறித்தும், பிரதமர் மோடி பற்றியும் அவர் கூறிய தகவல் என்பது உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதுபற்றி அமோஸ் யாட்லின் கூறியதாவது:
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் ஹமாஸ் ஒரு தீவிரவாத அமைப்பு. ஐஎஸ் அமைப்பு போன்றது. பெண்கள், குழந்தைகளை இரக்கமின்றி கொன்று குவிக்கிறது. தற்போது வரை ஹமாஸ் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. ஹமாஸ் எந்த வகையான சமாதானத்துக்கு தயாராக இல்லை. ஆனால் ஹமாஸ் அமைதி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்.
அதோடு இஸ்ரேல்-இந்தியா இடையேயான உறவு என்பது முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் இந்தியாவும், இஸ்ரேலும் ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்றன. அதேபோல் ஒரே மாதிரியான மரபுகளை கொண்டுள்ளன. பிரச்சனைகளிலும் கூட அப்படியான சூழல் தான் இருக்கிறது. உதாரணமாக இந்தியா, இஸ்ரேல் என 2 நாடுகளும் எல்லையில் எதிரிகளை கொண்டுள்ளன. இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனா ஆகியவை எதிரியாக இருக்கின்றன. எங்கள் எல்லையில் காசா, ஹெஸ்புல்லா, ஈரான் மற்றும் சிரியா தீவிரவாதிகள் எதிரிகளாக இருக்கின்றன.
இஸ்ரேல் இந்தியாவுக்கு நிறைய உதவிகளை வழங்கி வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களில் எங்களின் பங்கும் உள்ளது. இதனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஹமாஸ்-இஸ்ரேல் மோதலில் பிரதமர் நரேந்திர மோடி மத்தியஸ்தம் செய்யும் முயற்சியை நாங்கள் வரவேற்போம். ஏனென்றால் ராஜதந்திர நடவடிக்கைக்கு இந்தியா பெயர் பெற்றுள்ளது. பிரதமர் மோடியால் அதிசயம் செய்ய முடியும். இதனால் இருதரப்புக்கும் மத்தியஸ்தம் செய்தால் நாங்கள் மோடியின் விரலை பிடித்து செல்ல தயாராக இருக்கிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications