'"ரகம் ரகமாக" லட்சக்கணக்கில் ஏவுகணைகள்..10 கி.மீ டூ 200 கிமீ வரை டார்கெட்- இஸ்ரேலை கதறவிடும் ஹமாஸ்!
காஸா: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கம் பல்லாயிரக்கணக்கான ஏவுகணைகளை சொற்ப நிமிடங்களில் இஸ்ரேல் மீது வீசி உலகையே அதிரவைக்கும் தாக்குதல் நடத்தி மிகப் பெரிய யுத்தத்தை உருவாக்கி இருக்கிறது.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை, காஸாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் எனும் இஸ்லாமிய ஜிகாதி அமைப்பு 'ஏவுகணைகள்' ஸ்பெஷலிஸ்ட் அமைப்பு என்கின்றனர் ராணுவ ஆய்வாளர்கள்.
எகிப்து, ஈரான் ஆதரவு: எகிப்தில் இருந்து சுரங்கம் அமைத்து ஏவுகணை தயாரிப்புக்கான அத்தனை பொருட்களையும் கொண்டு வருகிறதாம் ஹமாஸ். ஈரானின் மறைமுக ஆதரவுடன் மேற்கு கரை, காஸா பகுதிகளில் பிரம்மாண்ட ஏவுகணை தயாரிப்பு தொழிற்சாலைகளை ஹமாஸ் நிர்வகித்து வருகிறது.

இஸ்ரேல் இலக்கில் ஏவுகணை தொழிற்சாலைகள்: இஸ்ரேல் நாட்டின் பிரதான இலக்குகளே இந்த ஏவுகணை தயாரிப்பு தொழிற்சாலைகள்தானாம். ஏனெனில் வகை வகையான ஏவுகணைகளை லட்சக்கணக்கில் தயாரித்து குவித்து வைத்திருக்கிறது ஹமாஸ். அதுவும் 10 கி.மீ. தொலைவில் இருந்து 200 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ரகம் ரகமான ஏவுகணைகளை கைவசம் வைத்திருக்கிறதாம் ஹமாஸ்.
10 கி.மீ தொலைவுக்கும் ஏவுகணை: ஹமாஸ் இயக்கம் தயாரித்திருக்கும் காசம் என்ற ஏவுகணை 10 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. கஸ்ட் 101 என்ற ஏவுகணை 16 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை குறிவைத்து நிர்மூலமாக்குமாம். சேஜில் 55 ஏவுகணை 55 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை அழிக்கும் வல்லமை கொண்டதாம்.
அடேங்கப்பா ரக ஏவுகணைகள்: அதிகபட்சமாக 200 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை அதாவது ஒட்டுமொத்தமாக இஸ்ரேலை அழித்து நாசமாக்கும் வல்லமை கொண்ட தொலை தூர ஏவுகணைகளையும் தயாரித்து வைத்திருக்கிறதாம் ஹமாஸ். எம் - 75 ரக ஏவுகணை 100கிமீட்டர்; ஃபஜிர் ஏவுகணை 120 கி.மீட்டர்; தி ஆர் - 160 என்ற ஏவுகணை 120 கி.மீட்டர்; எம் - 302 ரக ரவுகணைகள் 200 கி.மீ . தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும்.
இஸ்ரேலின் வல்லமை: ஒரு பயங்கரவாத இயக்கமான ஹமாஸ் இத்தனை வசதிகளை ரகம் ரகமான ஏவுகணைகளை வைத்திருக்கும் போது அதிநவீன ராணுவமான இஸ்ரேல் சும்மாவா இருக்கும்? ஹமாஸ் ஏவுகணகளை நடுவானில் தாக்கி அழிப்பது திருப்பி விடுவது என பலவகைகளிலும் பதிலடி கொடுக்கும் வல்லமையும் இஸ்ரேலுக்கும் இருக்கிறது. இருந்த போதும் இப்படி சொற்ப நேரத்தில் பல்லாயிரக்கணக்கான ஏவுகணைகளை இடைவிடாமல் செலுத்துகிற திடீர் "ஏவுகணை கொரில்லா" தாக்குதல்கள் எந்த ஒரு வல்லமை படைத்த தேசத்தையும் வாய்விட்டு கதறத்தான் வைக்கும் என்பதையே இன்றைய ஹமாஸ் தாக்குதல்கள் வெளிப்படுத்துகிறது என்கின்றனர் ராணுவ ஆய்வாளர்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications