Al-Aqsa.. 3 மதங்கள் உரிமை கோரும் நிலம்.. சரித்திர ரத்த யுத்தம்- ஹமாஸ் ஆபரேஷன் பெயரின் பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: இஸ்ரேல் மீது ஹமாஸ் யுத்தத்தை தொடங்கி இருக்கிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் முன்னெடுத்திருக்கும் Al-Aqsa Flood ஆபரேஷனை எதிர்கொள்வதற்கு இஸ்ரேல் உக்கிரமாக களமிறங்கி இருக்கிறது. இதனால் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை, இஸ்ரேலில் மரண ஓலங்கள் உலகை உலுக்க தொடங்கிவிட்டன.

ஆபரேஷன் Al-Aqsa Flood என ஹமாஸ் தீவிரவாதிகள் பெயர் வைத்திருப்பது சரித்திரம் தோறும்- நூற்றாண்டுகள் தோறும் நடக்கும் கிழக்கு ஜெருசலேமின் Al-Aqsa மசூதியை மையமாக வைத்துதான். அது என்ன Al-Aqsa மசூதி? என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.

Israel- Palestine War: What means Hamas Operation Name Al-Aqsa Flood?

- கிழக்கு ஜெருசலேம் என்பது மிகப் பழமையான நகரம். இஸ்லாம், யூத மதம் (இஸ்ரேல்) மற்றும் கிறிஸ்தவ மதத்தினர் உரிமை கோரும் நிலம் இது.
கிழக்கு ஜெருசலேமில் இஸ்லாமியர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்களின் பல புனித வழிபாட்டுத் தலங்கள் உள்ளன

- கிழக்கு ஜெருசலேமின் மிகப் பிரம்மாண்ட Al-Aqsa Mosque அல்-அக்ஸா என்ற பகுதியை இஸ்லாமியர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மூவரும் புனித வழிபாட்டு தலமாக போற்றுகின்றனர். Al-Aqsa Mosque வளாகத்தை இஸ்ரேலிய யூதர்கள் Temple Mount- டெம்பிள் மவுண்ட் என அழைக்கின்றனர்; முஸ்லிம்கள் இதனை Al- Haram- Al - Sharif என்கின்றனர். முஸ்லிம்கள், கடைசி நபியான ஹஸ்ரத் முகமது சொர்க்கம்சென்றார் என நம்பிக்கை வைத்துள்ளனர். இதுதான் Al-Aqsa Mosque Compound அல்லது Al-Aqsa என்றழைக்கப்படுகிறது.

Israel- Palestine War: What means Hamas Operation Name Al-Aqsa Flood?

- Al-Aqsa Mosque, ஒரே நேரத்தில் சுமார் 5,000 பேர் வழிபாடு நடத்தக் கூடிய பிரம்மாண்டமானது. குரானில் Al-Aqsa என்ற பெயர் இடம் பெற்றிருக்கிறது என்பது முஸ்லிம்களின் கருத்து. மெக்காவுக்கு முந்தைய முஸ்லிம்களின் புனித நகரமாகவும் வழிபாட்டு தலமாகவும் Al-Aqsa Mosque இருந்தது என்பது முஸ்லிம்கள் நிலைப்பாடு. இதனாலேயே மெக்கா, மெதினா வரிசையில் முஸ்லிம்களின் 3-வது புனித தலமாக Al-Aqsa Mosque திகழ்கிறது. Al-Aqsa என்பது யேசு கிறிஸ்துவின் வாழ்விடமாக இருந்த பகுதி என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

- யூதர்களும் இதனை புனித வழிபாட்டு தலமாக போற்றுகின்றனர்; இங்கு பழமையான யூத வழிபாட்டு தலங்கள் இருந்தன என்பது இஸ்ரேல் வாழ் யூதர்களின் நம்பிக்கை. இந்த பழமையான வழிபாட்டு தலங்களை முதலில் பாபிலோனியர்கள் அழித்தனர்; 2-வது புனித வழிபாட்டு தலத்தை முதலாம் நூற்றாண்டில் ரோமானியர்கள் அழித்தனர் என்கிறது யூதம். யூதர்களின் 3-வது புனித வழிபாட்டு தலம் இங்கேதான் கட்டப்பட்டது என்பது அவர்களது நம்பிக்கை.

Israel- Palestine War: What means Hamas Operation Name Al-Aqsa Flood?

- Al-Aqsa Mosque கடந்த 800 ஆண்டுகளாக முஸ்லிம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கே முஸ்லிம் அல்லாதவர்கள் உள்ளே நுழைய முடியாது. இதனால் யூதர்கள் இந்த Al-Aqsa Mosque-க்கு வெளியே தங்களது வழிபாட்டை நடத்தினர்..

- 1960களில் இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான 6 நாள் யுத்தத்திலும் Al-Aqsa Mosque மையமான இடமாக இருந்தது. அப்போது இஸ்ரேல் வசமானது இந்த பகுதி. இஸ்ரேல்- ஜோர்டான் இடையே இம்மசூதி தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டு யூதர்களும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

- கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கிறது. இங்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளன. Al-Aqsa Mosque-ன் நுழைவாயில்களிலும் இஸ்ரேலிய படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிராக 2000-ம் ஆண்டில் பாலஸ்தீனர்கள் புரட்சியில் இறங்கினர்.

Israel- Palestine War: What means Hamas Operation Name Al-Aqsa Flood?

- இஸ்ரேல் கட்டுப்பாட்டில் Al-Aqsa Mosque வந்த பின்னர், உள்ளே யூதர்கள் பெருமளவில் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டனர். அதாவது Al-Aqsa Mosque மீதான கட்டுப்பாட்டை இஸ்ரேல் மெல்ல மெல்ல அதிகரித்து கொண்டே போனது. முஸ்லிம்கள் வழிபாடு நடத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வழிபாட்டு உரிமை கிளர்ச்சிகளை முஸ்லிம்கள் நடத்த வேண்டிய நிலைமை உருவானது. இஸ்ரேல் தேர்தல் களத்திலும் Al-Aqsa Mosque பிரதான பிரச்சனையாக மையம் கொண்டது.

- 2021-ம் ஆண்டு Al-Aqsa Mosque மசூதிக்குள் இஸ்ரேலிய ராணுவம் ரம்ஜான் மாதத்தின் போது நுழைந்து நடவடிக்கை மேற்கொண்டது முஸ்லிம்களை கொந்தளிக்க வைத்தது. அப்போது 11 நாள் மிகப் பெரும் யுத்தம் நடந்தது.

- இப்போது Al-Aqsa Mosque யாருக்கானது என்பதுதான் யுத்தமாக மையம் கொண்டிருக்கிறது. இதனாலேயே ஹமாஸ் தீவிரவாதிகள் Al-Aqsa Flood என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக உக்கிரமான யுத்தத்தை பிரகடனப்படுத்தி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+