சர்ப்ரைஸ் அட்டாக்.. ஈரானில் முக்கிய இடங்களுக்கு புள்ளி வைத்த இஸ்ரேல்.. பதிலடிக்கு ரெடி! என்ன ஆகும்?
டெஹ்ரான்: கடந்த அக்டோபர் 3 ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து இஸ்ரேல் இதுவரை எந்த முக்கிய முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் இஸ்ரேல் ஏற்கனவே ஈரானில் எங்கெல்லாம் தாக்குதல் நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஈரானில் தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களை இஸ்ரேல் மார்க் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்பொல்லாஹ்வின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதற்கு பதிலடியாக, அக்டோபர் 1ம் தேதி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று இஸ்ரேல் அமெரிக்கா இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இஸ்ரேல் அமெரிக்கா இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில்.. ஈரானை எப்படி தாக்க வேண்டும்.. எங்கே தாக்க வேண்டும்.. என்று பதிலடி கொடுப்பது பற்றி ஆலோசனைகள் செய்யப்பட்டு உள்ளன.

கடந்த வாரம், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்தியது. அதில் ஈரானுக்கு பதிலடி தருவது குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதில் இஸ்ரேல் இறுதி முடிவுக்கு வரவில்லை. இஸ்ரேல் நாட்டு பிரதமருக்கும் - பாதுகாப்பு துறைக்கும் இந்த விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கவோ அல்லது உயர்மட்ட தலைவர்களை அகற்றவோ வாய்ப்பில்லை. அதாவது ஈரான் எதிர்பார்த்த இடங்களில் இஸ்ரேல் தாக்காது. ஆனால் அவர்கள் எதிர்பார்க்கத்திடங்களில் இஸ்ரேல் தாக்கும் என்கிறார்கள்.
சர்ப்ரைஸ் அட்டாக்: சமீபத்தில் ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நாட்டின் பதிலடி மோசமாகவும் மற்றும் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் இருக்கும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்து உள்ளார்.
இஸ்ரேலை ஈரான் தாக்கி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்து உள்ளோம். எங்கள் தாக்குதல் ஆபத்தானதாகவும், துல்லியமாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஆச்சரியமாகவும் இருக்கும். என்ன, எப்படி நடந்தது என்று அவர்களுக்குப் புரியாது.
ஈரான் யோசிக்க முடியாத வகையில்.. யோசிக்க முடியாத இடத்தில் அவர்களை அடிப்போம். அவர்கள் முடிவுகளைப் பார்த்து ஆச்சர்யம் அடைவார்கள்.. அதிர்ச்சி அடைவார்கள், என்று இஸ்ரேல் படை வீரர்களுக்கு ஆற்றிய உரையின் போது கேலண்ட் கூறி உள்ளார்.
எங்களைத் தாக்குபவர்கள் பாதிக்கப்படுவார்கள் மற்றும் அதற்குரிய விலையைக் கொடுப்பார்கள் என்று உலகத்திற்கு தெரிய வேண்டும். அதை தெரியப்படுத்தும் விதமாக இந்த தாக்குதலை நடத்துவோம், என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்து உள்ளார். இந்த மோதல் கையை மீறி செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
கடந்த அக்டோபர் 3 ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து இஸ்ரேல் இதுவரை எந்த முக்கிய முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் இஸ்ரேல் ஏற்கனவே ஈரானில் எங்கெல்லாம் தாக்குதல் நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. சில இடங்களை இஸ்ரேல் குறித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அந்த இடங்களை இஸ்ரேல் தாக்கலாம்.. இதனால் மோதல் பெரிதாகும் வாய்ப்புகள் உள்ளன என்று இஸ்ரேல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications