இஸ்ரேலை விட ஈரான் அரசு பயப்படும் ஒரு விஷயம் இருக்கு.. வீடியோ வாயிலாக பேசிய நெதன்யாகு!

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ வாயிலாகப் பேசியுள்ளார். "இஸ்ரேலை விட கமேனியின் ஆட்சி ஒரு விஷயத்துக்கு அஞ்சுகிறது. அது நீங்கள் தான்.. ஈரான் மக்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள்" என அந்த வீடியோவில் கூறியுள்ளார் நெதன்யாகு.

கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில், இஸ்ரேல் தரப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். 251 பணயக்கைதிகளை காசாவிற்கு பிடித்துச் சென்றனர். அன்று இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே மூண்ட போர் இன்று வரை தொடர்கிறது. தொடர் சண்டையால் காசாவில் இதுவரை 43 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி விட்டனர். லெபனானில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு, ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

Israel PM Benjamin Netanyahu issues video message for Iranians Khamenei govt fears its people more than Israel

இதன் தொடர்ச்சியாக லெபனான் எல்லைக்குள் உள்ள ஈரானிய ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினரை அழிப்போம் என்று இஸ்ரேல் சூளுரைத்து நடவடிக்கையில் இறங்கியது. கடந்த செப்டம்பர் மாதம், லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் 5,000-க்கும் மேற்பட்ட பேஜர் சாதனங்கள் வெடித்துச் சிதறிய நிகழ்வு மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமல்லாமல், மொத்த உலகையும் உலுக்கி எடுத்தியது. பின்னர் வாக்கி டாக்கிகள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல், தரைவழித் தாக்குதல் என களமிறங்கியது.

ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் ராணுவ துருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் மக்களுக்கு நேரடி செய்தியை வெளியிட்டுள்ளார். ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரசாங்கம், இஸ்ரேலை விட ஈரான் மக்களைப் பார்த்து அதிகம் பயப்படுவதாகக் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்திற்கு மத்தியில் ஈரானிய மக்களுக்கு வீடியோ வாயிலாக செய்தி அளித்துள்ளார் நெதன்யாகு.

அதில் பேசியுள்ள நெதன்யாகு, "ஈரானின் கமேனிக்கு இஸ்ரேலை விட பயம் ஒன்று இருக்கிறது. அது நீங்கள் தான்.. ஈரான் மக்கள். அதனால்தான் அவர்கள் உங்கள் நம்பிக்கைகளை நசுக்குவதற்கும் உங்கள் கனவுகளைத் தடுக்கவும் அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறார்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள், சுதந்திர உலகில் இஸ்ரேலும் மற்றவர்களும் உங்களுடன் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் ராணுவத்துக்கு ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. "ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக செயல்படுவோருக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்" என இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு கமேனி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+