"நாங்க பேச மாட்டோம்.. எங்க தாக்குதல்கள் தான் பேசும்" இஸ்ரேல் பிரதமர் பரபர பேச்சு.. வெடிக்கும் போர்
டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே இப்போது போர் வெடித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் டிரோன் கமெண்டரை இப்போது இஸ்ரேல் கொன்றுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது பேச்சை வைத்துப் பார்த்தால் இப்போதைக்குப் போர் முடிவது போலத் தெரியவில்லை என்றே உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல் காசா இடையே போர் தீவிரமாக நடந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இப்போது லெபனான் மீதும் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஹிஸ்புல்லா: லெபனான் நாட்டின் முக்கிய இலக்குகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி முகமது ஹுசைன் கொல்லப்பட்டுள்ளார். இவர் ஹிஸ்புல்லா விமானப் படைத் தளபதியாக இருக்கிறார். ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து நடத்தப்படும் நான்காவது தாக்குதல் இதுவாகும்.. 1973இல் பிறந்த ஸ்ரர், நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் பயிற்சி பெற்றார். அதன் பிறகு ஏமன் நாட்டிற்கும் சென்றவர் ஆவார். இவரைத் தான் இப்போது இஸ்ரேல் ஸ்கெட்ச் போட்டு காலி செய்துள்ளது.
போர் நிறுத்த கோரிக்கை: லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற இந்த ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உலக நாடுகள் இது எங்குப் பிராந்திய போராக வெடித்து விடுமோ என்று அஞ்சுகிறது. ஈரான் உட்பட மற்ற உலக நாடுகள் வந்தால் அது பேராபத்தில் சென்று முடியும். இதனால் குறைந்தபட்சம் 21 நாட்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்துகின்றன.
ஆனால், இஸ்ரேல் இதை எல்லாமே காதிலேயே வாங்கிக் கொள்வதில்லை. லெபனான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து தீவிரப்படுத்தியே வருகிறது. உலக நாடுகளின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது ராணுவம் முழு வீச்சில் தாக்குதலைத் தொடரும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
நாங்கள் பேச மாட்டோம்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தெற்கு இஸ்ரேல் பகுதிக்கு அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்கும் சூழல் உருவாக வேண்டும். அதுவரை ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான தாக்குதலை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் பேச மாட்டோம். எங்கள் செயல்களே பேசும்" என்று அவர் தெரிவித்தார்.
பின்னணி என்ன: கடந்தாண்டு அக். 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியது. இதில் பலர் கொல்லப்பட்ட நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காசாவில் உள்ள ஹமாஸ் படைகள் மீது இஸ்ரேல் போரை ஆரம்பித்தது. இருப்பினும், அதில் அப்பாவி மக்கள் பலரும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்தது.
முதலில் சிறு சிறு தாக்குதல்களாகவே இவை இருந்தன. இருப்பினும் காலப் போக்கில் அவை மிகப் பெரிய தாக்குதல்களாகத் தீவிரமடைந்தன. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே மோதல் தொடங்கியதில் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications