இவங்களுக்கு இரக்கமே இல்லையா? ராத்திரியில் வேலையைக் காட்டிய இஸ்ரேல்! உச்சகட்ட கோபத்தில் ஹிஸ்புல்லா..!
பெய்ரூட்: இஸ்ரேல் ஹிஸ்புல்லா போராளிகளிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்த நிலையில் திடீரென லெபனானில் தாக்குதல் நடத்தி இருக்கிறது இஸ்ரேல். நவம்பர் மாதத்திற்கு பிறகு முதன்முறையாக மார்ச் 28ஆம் தேதி வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில் உயிரை காத்துக் கொள்ள பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வரும், நிலையில் கடந்த ஆண்டு முதல் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி முதல் இஸ்ரேலின் நடவடிக்கை பதில் கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
மேலும் இஸ்ரேலுக்குள்ளேயே நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டு மக்களையும் வெளிநாட்டு மக்களையும் கொன்று வருவதாகவும், பலரை பணைய கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் போர் விமானங்கள் மூலமாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. போர் தொடங்கி பல மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியது. மேலும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக பிற பகுதிகளுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹமாஸ் இஸ்ரேல் இடையே கடுமையான மோதல் தொடர்ந்து வந்து நிலையில் பழைய கைதிகளை ஒப்படைப்பது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. 2023 அக்டோபரில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த தகவல் நிம்மதி அளிக்கும் வகையில் இருந்தது. ஆனால் பழைய கைதிகளை ஒப்படைக்கவில்லை என கூறி ஹமாஸ் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே காசாவை தொடர்ந்து லெபனான் தலைநகர் பெய்ரூரூட்டில் இன்று இஸ்ரேல் புதியதாக வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலில் இருந்து சீறிப்பாய்ந்த ராக்கெட்டுகள் ட்ரோன்கள் வெடித்து சிதறியதில் பெய்ரூட்டின் பல அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்தது. எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடைபெற்ற நிலையில் அங்கு இரண்டு பள்ளிக்கூடங்கள் இருந்ததாகவும் அஞ்சப்படுகிறது.
தாக்குதல் தொடர்பாக உயிர் சேதம் மற்றும் பொருட் சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே தஹியே பகுதியில் ஹிஸ்புல்லாவில் ட்ரோன் கிடங்குகளை தாக்கி அழித்துள்ளதாகவும் அங்கு ஹிஸ்புல்லாக்கள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி இருக்கிறது. வடக்கு இஸ்ரலின் மீதான ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலுக்கு பழி தீர்க்கும் நடவடிக்கை இது எனவும் இஸ்ரேல் பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளில் மக்களை உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் உத்தரவிட்ட சில மணி நேரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்க.
ஆனாலும் இஸ்ரேல் தங்கள் எந்த ஒரு பகுதியிலும் தாக்குதல் நடத்தவில்லை எனவும், லெபனான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தேவையற்ற ஒரு காரணத்தை தேடுவதாக குற்றம் சாட்டி உள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் தாக்குதல் காரணமாக லெபனானில் அரசு பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பாட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் வாகனங்கள் மூலமாகவோ அல்லது பிற வழிகளில் வெளியேறுவது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இஸ்ரேல் லெபனான் எல்லையில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற காலக்கெடு பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. ஆனாலும் லெபனானின் ஐந்து இடங்களில் இஸ்ரேல் ராணுவம் முகாமிட்டு இருந்த நிலையில் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications