இஸ்ரேலுக்கு தலைவலியாக இருக்கும் ஹமாசின் ‘பாதாள உலகம்’ அப்படி என்னதான் இருக்கு?
டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ஹமாஸ் அமைப்பினரின் பாதாள உலகம் என்று கருதப்படும் சுரங்கப்பாதைகளை தவிடு பொடியாக்க இஸ்ரேல் முனைப்பு காட்டி வருகிறது. இஸ்ரேல் ஏன் இந்த சுரங்க பாதைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
கடந்த 7 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை பாய விட்டது ஹமாஸ் அமைப்பு. காசா முனையில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை தாக்குதலால் திக்குமுக்காடிப்போன இஸ்ரேல், சுதாரித்துக் கொண்டு பதில் நடவடிக்கையை ஆரம்பித்தது. அப்போது முதல் கிட்டத்தட்ட ஒரு வாரத்தை நெருங்கி போர் இரு தரப்பினருக்கும் இடையே நீடித்து வருகிறது.

போர் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது. காசா மீது வான்வழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் தரை வழி தாக்குதலுக்கும் தயாராகி வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இஸ்ரேலின் தீவிர தாக்குதலால் காசாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
சுரங்கப்பாதை: காசாவை முழுமையாக முற்றுகையிடப்பட்டதால் அந்நகரம் இருளில் மூழ்கியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு யானைபலம் கொடுப்பதாக அமைந்து இருப்பது அவர்கள் அமைத்துள்ள சுரங்கப்பாதைதான். சுரங்கப்பாதைகள் இருந்தால் நம்மால் ஹமாசை வீழ்த்த முடியாது என நினைத்த இஸ்ரேலும் தற்போது சுரங்கப்பாதைகளின் கட்டமைப்புகளை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஹமாஸ் அமைப்பிற்கு பெரும் பலமாக இருக்கும் இந்த சுரங்கப்பாதையில் என்னதான் இருக்கிறது.. எங்கு இருக்கிறது என்பது பற்றி பார்ப்போம். சுதந்திர பாலஸ்தீனம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஹமாஸ் இயக்கம் 1987 ல் தோன்றியது. பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதி 41 கி.மீட்டர் நீளமும் 21கி.மீ. அகலமும் கொண்டது. இது மத்தியதரைக் கடல், இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ள காசாவில் சுமார் 22 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
60 மைல் தூரத்திற்கு: மிகவும் மக்கள் அடர்த்தி மிக்க நகரமாக காசா உள்ளது. 2007- ம் ஆண்டு முதல் ஹமாஸ் அமைப்பு காசாவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. சிறிய பகுதியில் மட்டுமே இருந்தாலும் வலுவான இஸ்ரேலின் ராணுவத்தை மீறியும் அதன் உளவு அமைப்பான மொஸாட்டிற்கும் தெரியாமல் இயக்கத்தை செழிப்புடன் வழிநடத்த ஹமாஸ் சுரங்கப்பாதை வலை அமைப்பை ஏற்படுத்தியது.
நீளமான சுரங்கப்பாதை: காசா பகுதியில் சுமார் 60 மைல் தூரத்திற்கு சுரங்கப்பாதைகள் அமைந்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆயுத கிடங்காகவும் ஆயுத பரிமாற்றத்திற்காகவும் சுரங்கபபதைகளை ஹமாஸ் பயன்படுத்தி வந்துள்ளது. எகிப்து முதல் காசா வரை ரஃபா நகரம் வழியாக செல்லும் சுரங்கப்பாதைதான் ஹமாஸ் அமைப்பினரின் நீளமான சுரங்கப்பாதையாக கருதப்படுகிறது. சுரங்கப்பாதைகள் என்றால் சிறிய அளவில் தான் இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.
முற்றிலும் அழிப்பதுதான்: சுமார் 40 அடி அகலத்திற்கு கான்கீரிட் சுவர்களை கொண்டு கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதைகளை வாழ்விடமாகவும் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்து இருக்கின்றனர். தற்போது இஸ்ரேல் படைகள் இந்த சுரங்கப்பாதைகளை தகர்ப்பதுதான் ஹமாஸ் அமைப்பினருக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும் எனக் கருதி வான்வழி தக்குதலை நடத்தி வருகிறது. ஹமாசின் பாதாள உலகம் என்று சொல்லப்படும் இந்த சுரங்கப்பாதைகளை முற்றிலும் அழிப்பதுதான் தங்களின் நடவடிக்கையாக இருக்கும் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
ஹமாசின் இந்த பாதாள உலகத்தின் வலை அமைப்பு என்பது எங்கெல்லாம் இருக்கிறது என்பது ஹமாஸ் இயக்கத்தினருக்கு மட்டுமே முழுமையாக தெரியும். எனவே, இதை முற்றிலுமாக உடனடியாக இஸ்ரேலால் தகர்த்து விட முடியுமா என்பது சற்று கேள்விக்குறியான விஷயம்தான்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications