நொடியில் எரிந்து பொசுங்கிய மக்கள்.. இஸ்ரேல் களமிறக்கிய "டிராகன்".. நிலைமை கைமீறுதே.. போச்சு!
பெய்ரூட்: இஸ்ரேல் - ஈரான் - லெபனான் போர் விவகாரம் உச்சம் அடைந்து உள்ளது. இதில் இஸ்ரேல் அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்ரேல் லெபனான் மீது பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.
காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளில் இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸைப் பயன்படுத்துவதால், பொதுமக்கள் கடுமையான மற்றும் நீண்டகால காயங்களுக்கு ஆளாகிறார்கள், அவர்கள் கொடுமைகளை சந்தித்து மரணங்களை சந்திக்கிறார்கள், என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த வருடமே அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் லெபனான் மற்றும் காசாவில் எடுக்கப்பட்ட வீடியோக்களை, புகைப்படங்களை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சோதனை செய்துள்ளது. காசா நகர துறைமுகம் மற்றும் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் உள்ள இரண்டு கிராமப்புற இடங்களில் பீரங்கிகளால் வீசப்பட்ட குண்டுகளில் வெள்ளை பாஸ்பரஸ் இருந்ததை உறுதி செய்துள்ளனர். இங்கே வெள்ளை பாஸ்பரஸ் மூலம் மக்கள் கொடுமை படுத்தப்பட்டு உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளை பாஸ்பரஸ்: வெள்ளை பாஸ்பரஸ் மக்களையும் பொருட்களையும் எரிக்கும் தீயை உருவாக்கும் திறன் கொண்டது. நொடியில் தீயை இது உருவாக்கும். அதேபோல் நச்சுவாய்ந்த புகையை வெளியிட்டு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். உடனடியாக மரணத்தை கொடுக்காமல் சில நாட்களுக்கு கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்கும் திறன் கொண்டது. பூச்சு கொல்லியாக இது பயன்படுத்தப்படும் இதை குண்டாக மாற்றி பயன்படுத்தும் பட்சத்தில் அது உயிரை கொடுமைப்படுத்தி கொல்லக்கூடியது.
வெள்ளை பாஸ்பரஸ் மக்கள் நெரிசலான பகுதிகளில் பயன்படுத்தப்பட்டால், அது கடுமையான தீக்காயங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் கடுமையான நோய்களை உண்டாக்கும். முக்கியமாக குழந்தைகள் மூச்சு திணறி, நுரை தள்ளி மரணம் அடையும் ஆபத்துகளும் உள்ளன. அக்டோபர் 11 அன்று, மனித உரிமைகள் கண்காணிப்பகம் காசா நகரில் உள்ள அல்-மினா பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களை தொலைபேசி இது தொடர்பாக மூலம் பேட்டி கண்டது.
அவர்கள் வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தப்பட்டதை விசாரணையில் உறுதி செய்துள்ளனர். இவர்கள் பாஸ்பரஸ் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்துள்ளனர். இந்த ஆவணங்கள் காரணமாக இஸ்ரேலுக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டு உள்ளது.
மீண்டும் பயன்பாடு: இதற்கு இடையேதான் இஸ்ரேல் - ஈரான் - லெபனான் போர் விவகாரம் உச்சம் அடைந்து உள்ளது. இதில் இஸ்ரேல் அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்ரேல் லெபனான் மீது பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் லெபனான் உள்ளே சென்று தாக்குதல் நடத்தும் போது.. பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.
ஓடிய இஸ்ரேல்: முன்னதாக லெபனானுக்கு நுழைய முயன்ற இஸ்ரேலின் Egoz சிறப்புப் படைப் பிரிவு பின்வாங்கி உள்ளது. நேற்று லெபனான் உள்ளே ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்று உள்ளது இஸ்ரேலின் எலைட் படிப்பிரிவான Egoz சிறப்புப் படைப் பிரிவு.
அவர்களை தடுக்கும் விதமாக லெபனான் படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி உள்ளனர். தரைவழி தாக்குதல் எல்லாம் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா ஸ்டைல். அதை இஸ்ரேல் செய்ய முயன்று அடிவாங்கி உள்ளது. ஹிஸ்புல்லாவுடன் நடந்த சண்டையில் 8 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். மீதம் இருந்த வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்து ஓடி உள்ளனர்.
இஸ்ரேல் வீரர்களை துப்பாக்கியால் தாக்கியும், கையால் அடித்தும், கையெறி குண்டுகளை வீசியும் ஹிஸ்புல்லா படை வீரர்கள் கொன்றுள்ளனர். இதனால் பயந்த இஸ்ரேல் வீரர்கள் வேறு வழியின்றி லெபனானில் இருந்து வெளியேறி உள்ளனர். லெபனானில் இருக்கும் தெற்கு எல்லை பகுதியை ஊடுருவ முயன்று இஸ்ரேல் தோற்று ஓடி உள்ளது. வடகிழக்கு எல்லைக் கிராமமான அடேஸ்ஸேவிற்குள் நுழைய முயன்ற இஸ்ரேலிய வீரர்களை திரும்பப் பெறும் நிலை ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications