"சும்மா விட மாட்டோம்.." ஈரான், ஹமாஸ் இல்லை.. மற்றொரு அரபு நாட்டை எச்சரிக்கும் இஸ்ரேல்.. பதற்றம்!
டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவுவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இப்போது இந்த போர் மேலும் பெரிதாகும் ஒரு ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே இஸ்ரேல்- ஈரான் இடையே போர் வெடித்துள்ள நிலையில், இப்போது மற்றொரு அரபு நாட்டிற்கு எதிராகவும் இஸ்ரேல் சில பரபர கருத்தைத் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் நாட்டை சுற்றி பதற்றம் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஒரு பக்கம் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் போரிட்டு வருகிறது. மறுபுறம் இஸ்ரேல் ஈரான் இடையேயும் நேரடியாகப் போர் வெடிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்தச் சூழலில் இப்போது இஸ்ரேல் நாட்டிற்கும் மற்றொரு அரபு நாடான ஐக்கிய அமீரகத்திற்கும் இடையே மோதல் வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஐக்கிய அமீரகம்: யூதக் குழுவான சபாத் என்ற அமைப்பின் தூதுவரான ஸ்வி கோகன் என்பவர் கடந்த வியாழக்கிழமை திடீரென மாயமானார். ஐக்கிய அமீரகத்தில் மாயமான அவர் அப்போது முதல் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாத ஒரு சூழலே நிலவியது. இந்தச் சூழலில் அவர் அங்குச் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது இப்போது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
"ஏகப்பட்ட அணு குண்டுகள்.." ஈரானின் அடுத்த பிளான் இதுதான்.. எச்சரிக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இது தொடர்பான விசாரணையில் ஐக்கிய அமீரகம் இறங்கியுள்ளது. இதை யூதர்களுக்கு எதிரான பயங்கரவாத சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் அரசும் தனது உளவு அமைப்பான மொசாட் மூலம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம்: இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த வியாழக்கிழமை மாயமான ஸ்வி கோகனின் சடலம் இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவரது கொலை என்பது ஒரு கிரிமினல் யூத-விரோத பயங்கரவாதச் செயலாகும். குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த இஸ்ரேல் அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
கோகன் மாயமானது முதலே அவரது குடும்பத்தினருடன் இஸ்ரேல் அதிகாரிகள் தொடர்பில் இருந்துள்ளனர். இஸ்ரேல்-மால்டோவன் நாட்டவரான கோகன் சடலமாக மீட்கப்பட்டது இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஐக்கிய அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், வரும் காலங்களில் இது பெரிய பிரச்சினையாக வெடிக்கும் ஆபத்து இருக்கிறது.
இஸ்ரேல் அமீரக உறவு: இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளுக்கு இடையே கடந்த காலங்களில் நல்லுறவு இருந்தது இல்லை. இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா பெரியளவில் முயன்ற நிலையில், கடந்த 2020ல் இதற்குப் பலன் கிடைத்தது. இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தக்கூடிய ஆபிரகாம் உடன்படிக்கை அப்போது கையெழுத்தானது. அதன் பிறகே வளைகுடா நாடுகளான பஹ்ரைன், அமீரகம், மொராக்கோ, சூடான் ஆகியவை இஸ்ரேலுடன் முறையான தூதரக உறவுகள் ஏற்பட்டன.
மோதல் ஏற்படலாம்: ஆனாலும், கூட இஸ்ரேல் தனது மக்களை அத்தியாவசியமான பயணங்களுக்கு மட்டுமே ஐக்கிய அமீரகம் செல்ல வேண்டும் என எச்சரித்து இருந்தது. பயங்கரவாத நடவடிக்கைகளை இருப்பதால் ஐக்கிய அமீரகத்தில் இஸ்ரேல் நாட்டவர்களுக்கு ஆபத்து இருக்கும் என்றும் எச்சரித்து இருந்தது. இந்தச் சூழலில் தான் ஸ்வி கோகன் ஐக்கிய அமீரகத்தில் உயிரிழந்துள்ளார். இதற்கு இஸ்ரேலும் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ள நிலையில், இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் கூட ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
-
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்! -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
புனித அல்-அக்ஸா மசூதியை மூடிய இஸ்ரேல்.. பாலஸ்தீனியர்கள் உள்ளே நுழைய கூட அனுமதி மறுப்பு -
"கோழைகள்.." கண்கள் சிவந்த டிரம்ப்.. நேட்டோவில் இருந்து வெளியேறும் அமெரிக்கா? சரமாரி பாய்ச்சல் -
முரண்டு பிடிக்கும் டிரம்ப்.. எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பிய டீல்? என்ன மேட்டர் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications