"ஏகப்பட்ட அணு குண்டுகள்.." ஈரானின் அடுத்த பிளான் இதுதான்.. எச்சரிக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
டெல் அவிவ்: இஸ்ரேல் ஈரான் இடையே பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த மாதம் தாங்கள் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் முக்கியமான சக்தி திட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருக்கிறார். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதாகக் கூறப்படும் நிலையில், இது முக்கியமானதாக மாறியுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதிகளில் கடந்த சில காலமாகவே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஒரு பக்கம் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

இஸ்ரேல் ஈரான் மோதல்: மற்றொருபுறம் இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடி போர் வெடிக்கும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே ஈரான் நாட்டின் அணு சக்தி திட்டங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பிரமதர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
கடந்த அக். மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளானதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருக்கிறார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய நெதன்யாகு, இந்த தாக்குதலால் ஈரானின் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை உற்பத்தித் திறன்களைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்: அவர் மேலும் கூறுகையில், "இது ஒன்றும் பெரிய சீக்ரெட் இல்லை. எங்கள் தாக்குதலில் ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டத்தில் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அவர்கள் அணு ஆயுதங்களை உருவாக்க முயன்று வரும் நிலையில், அதை எங்கள் தாக்குதல் தடுக்கவில்லை. ஈரான் பல அணு குண்டுகளை உருவாக்க முயல்கிறது.
ஈரான் எங்களை அழிப்பதற்காக அணு குண்டுகளை உருவாக்கி கையிருப்பில் வைத்துக் கொள்ள முயல்கிறது. ஏற்கனவே ஈரான் வசம் நீண்ட தூரச் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ள நிலையில், அடுத்த கட்டமாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்க ஈரான் முயல்கிறது" என்றார்.
தாக்குதல்கள்: முன்பு ஈரான் தாக்குதலுக்குப் பதிலடியாகக் கடந்த அக்டோபர் 26ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இஸ்ரேல் மீது ஈரான் கடந்த சில காலமாகவே தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அதற்குப் பதிலடியாகவே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் குறிவைத்து இந்த துல்லியமான தாக்குதல்களை நடத்தப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம் ஈரான் ராணுவம் பெரியளவில் தாக்குதலில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றே கூறியது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் மிக சிறிய பாதிப்பே ஏற்பட்டதாகவும் இந்தத் தாக்குதலால் பிராந்தியத்தில் அமைதியின்மை ஏற்பட்டு இருப்பதாகவும் அப்போது ஈரான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னணி என்ன: காசா பகுதியில் நடந்த தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஈாரன் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ஹிஸ்புல்லா மீதும் தங்கள் தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்தது. அப்படி நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் தான் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஈரான் முதலில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடியாகவே கடந்த அக். மாதம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்கு எதிராக அமெரிக்கா செய்யும் சதி.. சுதாரித்துக்கொண்ட ஜி ஜின்பிங்.. ஈரான் தான் மையப்புள்ளி! -
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா! -
முறிந்த பேச்சுவார்த்தை.. முளைக்கும் புது நம்பிக்கை! ஒரே ரூமில் அமர்ந்து பேச அமெரிக்கா- ஈரான் சம்மதம் -
அமெரிக்க போர் கப்பல்கள் கண்ணில் மண்ணை தூவிய சீனா.. அசால்டாக ஹார்முஸை கடந்து பயணம்! அது எப்படி -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
வெளிச்சம் தெரிகிறது.. இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை.. மீண்டும் Big Boss ஆக மாறும் பாகிஸ்தான்! -
ஈரான் - அமெரிக்கா மோதல்.. சீனுக்குள் வரும் சீனா! 4 அம்ச் திட்டம்.. ஜி ஜின்பிங் போடும் பலே பிளான்? -
ஈரானுக்கு மிகப்பெரிய ஆஃபர் கொடுத்த ரஷ்ய அதிபர் புடின்.. அரண்டுபோன டிரம்ப் 'இது மட்டும் நடக்க கூடாது' -
"5 vs 20.." விட்டு கொடுக்காத ஈரான்.. விடாப்பிடியாக இழுக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்? -
ஈரான் ஈரக்குலையை நடுங்க வைக்கும் அறிவிப்பு.. டீல் பேசும் ட்ரம்ப்! நடு கடலில் தத்தளிக்கும் கப்பல்கள்! -
இஸ்லாமாபாத் டூ இஸ்ரேல்! இடையே வந்த அந்த ஒரு போன் கால்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை பெயிலானது ஏன்? -
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்!











Click it and Unblock the Notifications