பேரழிவை சந்திக்க போறீங்க.. ஹிஸ்புல்லாவை கடுமையாக எச்சரித்த இஸ்ரேல்! உக்கிரமடையும் போர் சூழல்
டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் கடுமையான வான்வழி தாக்குதலை நடத்தி வரும் நிலையில், தற்போது தரை வழியாக ஊடுருவவும் தயாராகி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் படைகள் மீது ஹில்புல்லா அமைப்பு தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த தாக்குதல் நீடித்தால் ஹில்புல்லா பேரழிவை சந்திக்கும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையேயான மோதல் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.
மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 16 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவ முயன்று வருகிறது. இப்படி இருக்கையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா எனும் அமைப்பு, இஸ்ரேல் ஆக்கிரமிப்புகள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இது இஸ்ரேலுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. இது குறித்து எச்சரித்த இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ், "ஹிஸ்புல்லா மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது. அவர்கள் நிலைமையை மேலும் மோசமாக்குகிறார்கள். ஒவ்வொரு நாளும் நாங்கள் அதிகமான அளவில் தாக்குதல்களை காண்கிறோம். இது இப்படியே நீடித்தால் அவர்கள் பேரழிவை சந்திப்பார்கள்" என ஹிஸ்புல்லாவை எச்சரித்துள்ளார்.
போர் விவகாரத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. பயங்கரவாதத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது என்றும் அந்நாடுகள் கூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications