“மொசாத்” எஃகு கோட்டையில் ஓட்டை.. உலகின் தலைசிறந்த இஸ்ரேலின் உளவு அமைப்பை மொட்டையடித்த பாலஸ்தீன்
அவீவ்: உலகின் தலைசிறந்த உளவு அமைப்பு என்று பெயர் வாங்கிய இஸ்ரேலின் மொசாத்தின் கோட்டை நேற்று பாலஸ்தீனின் ஏவுகணை தாக்குதலால் ஓட்டையாகி உள்ளது. இதில் உளவுத்துறை தவறவிட்டது என்ன? விரிவாக பார்ப்போம்.
நேற்றைய தினம் பாலஸ்தீனின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதல் அந்நாட்டை நிலைகுலைய செய்து இருக்கிறது. பிரிட்டன் மற்றும் மேற்குலக நாடுகளால் உருவாக்கப்பட்ட நாடான இஸ்ரேல், பாலஸ்தீன் நாட்டின் காசா, ஜெருசலேம், மேற்கு கரை பகுதிகளை ஆக்கிரமிக்க அந்நாட்டின் மீது பல ஆண்டுகளாக பல வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காசாவுக்குள் இஸ்ரேல் படையினர் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

மேலும் ஜெருசலேமில் உள்ள அக்சா மசூதிக்கு செல்ல முயன்றவர் பாலஸ்தீன் மக்களை அடித்து விரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீன் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என லட்சக்கணக்கான பாலஸ்தீன் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில் அக்சா மசூதிக்கு தொழுகை நடத்த செல்லும் பாலஸ்தீனர்கள் மீதும் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் ஜோர்டான் வெளியுறவுத் துறை அமைச்சர் அல் அக்சா மசூதிக்கு கடந்த வாரம் சென்றபோது இஸ்ரேலிய படையினர் காலணிகளுடன் நுழைந்ததுடன், இஸ்லாமிய தலைவர்களின் கல்லரைகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இஸ்ரேலுக்கு பாலஸ்தீன், ஜோர்டான் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் நேற்று காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி பாலஸ்தீனிலிருந்து 5000 க்கும் அதிகமான ராக்கெட்டுகளை ஏவி உள்ளது.
இதில் இஸ்ரேலின் ராணுவ மையங்கள், ஆயுத கிடங்குகள், விமான நிலையங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. ஆபரேசன் அல் அக்சா ஃபிலட் என்ற பெயரில் ஹமாஸ் நடத்திய இந்த தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள். இஸ்ரேலுக்குள் புகுந்து அந்நாட்டு ராணுவ வீரர்கள், அதிகாரிகளை ஹமாஸ் சிறைபிடித்து சென்று உள்ளது. இதனை அடுத்து இஸ்ரேல் போர் பிரகடனத்தை அறிவித்து உள்ளதுடன், இரவே பாலஸ்தீனை நோக்கி இஸ்ரேல் ஏவுகணைகளை ஏவி இருக்கிறது. இதில் பாலஸ்தீன் தரப்பில் 250 க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
ஒரு பக்கம் போரின் தீவிரம் அதிகரித்தாலும், இத்தனை நாட்கள் கட்டிக்காத்த பெயரை இஸ்ரேல் இழந்து உள்ளது. இஸ்ரேல் என்றாலே பலமாக கூறப்படுவது அதன் உளவு அமைப்பான மொசாத் தான். ஜெர்மனியில் யூத இன அழிப்பில் ஈடுபட்ட நாஜிக்களை பல நாடுகளுக்கு அத்துமீறி சென்று கொன்றது, பாலஸ்தீனை ஆக்கிரமிப்பதில் முக்கிய பங்கு வகித்தது, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த முடியாத அளவுக்கு முன் கூட்டியே எதிரிகளின் திட்டங்களை ராணுவத்துக்கு தெரிவிப்பது என எஃகு கோட்டைபோல் உலக நாடுகளால் மொசாத் பார்க்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட உளவு கட்டமைப்பை கொண்ட நாட்டில், ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதல் மொசாதின் எஃகு கோட்டையில் விழுந்த ஓட்டையாகவே பார்க்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications