மஞ்சள் கோட்டை கடந்தால் மரணம்.. பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் புது ரூல்ஸ்! இதுதான் போர் நிறுத்தமா?
காசா: பாலஸ்தீனத்தில் டிரம்ப் தலையீட்டால் போர் நிறுத்தம் சாத்தியமானதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேலிய ராணுவத்தினர் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அதாவது, இஸ்ரேலிய ராணுவம், காசாவின் தெற்கில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் மஞ்சள் கோட்டை கடப்பவர்களை கொலை செய்து வருகிறது. சாலையில் போடப்படுவதை போல கண்ணுக்கு தெரியும் வகையில் இந்த கோடு இருக்காது. மாறாக செயற்கைக்கோள் படங்களில் இந்த கோடு தெரியும். எனவே இதை பார்க்க முடியாமல், கோட்டை கடக்கும் பாலஸ்தீன மக்கள் சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர்.

போர் நிறுத்தம் காரணமாக இஸ்ரேலியப் படைகள் மஞ்சள் கோட்டிற்குப் பின்னால் நகர்ந்துள்ளன. அங்கு செயற்கைக்கோள் படங்கள் சுமார் 40 செயலில் உள்ள இராணுவ நிலைகளை காட்டுவதாகத் தெரிகிறது. ஆனால், இந்த எல்லை எங்குள்ளது என்று தங்களுக்குத் தெரியாததால், மரண அபாயங்களை எதிர்கொள்வதாக பாலஸ்தீனியர்கள் தெரிவிக்கின்றனர். காசா பகுதியின் பாதிக்கும் மேற்பட்ட நிலப்பகுதியை இஸ்ரேல் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சுருக்கமாக சொல்வதெனில் 58% காசா நிலப்பரப்பு இன்னமும் இஸ்ரேல் பிடியில்தான் இருக்கிறது.
துப்பாக்கிச்சூடு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபுறம், பாலஸ்தீன குடியிருப்புகளை இடித்து தள்ளும் பணிகளையும் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஆஸ்கார் விருது பெற்ற 'நோ அதர் லேண்ட்' ஆவணப்படத்தில் இடம்பெற்ற மசாபர் யாட்டாவில் பல பாலஸ்தீனிய வீடுகளையும், கால்நடை கொட்டகைகளையும் இஸ்ரேலிய படைகள் இடித்து தள்ளியிருக்கின்றன. ஆயுதம் தாங்கிய இராணுவ மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புடன் இந்த அத்து மீறல் நடந்திருக்கிறது.
ஹெப்ரான் வடக்கில் உள்ள பெய்ட் உம்மார் நகரில் 38,000 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தை பறிமுதல் செய்ய இஸ்ரேலியப் படைகள் இராணுவ உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலப்பகுதிகள் பல குடும்பங்களுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டங்கள், பாதாம் மரங்கள் மற்றும் ஆலிவ் மரங்கள் உள்ளன. இது பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
காசாவில் உள்ள அரசு ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அக்டோபர் 10 முதல் நவம்பர் 10 வரை, வான்வழித் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் நேரடித் துப்பாக்கிச் சூடு மூலம் இஸ்ரேல் குறைந்தது 282 முறை சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது என தெரிய வந்திருக்கிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications