For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுதான் நேரம்.. பேஸ்புக்கை டெலிட் செய்யுங்கள்.. வாட்ஸ் ஆப் துணை நிறுவனர் அதிர்ச்சி டிவிட்

பேஸ்புக் அப்ளிகேஷனை மொபைலில் இருந்து டெலிட் செய்யும்படி வாட்ஸ் ஆப் துணை நிறுவனர் கோரிக்கை வைத்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பேஸ்புக் ஆப்பை டெலிட் செய்ய சொல்லும் வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்- வீடியோ

    நியூயார்க்: பேஸ்புக் அப்ளிகேஷனை மொபைலில் இருந்து டெலிட் செய்யும்படி வாட்ஸ் ஆப் துணை நிறுவனர் கோரிக்கை வைத்துள்ளார்.

    பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பிரச்சனை இப்போது பெரிதாகி இருக்கிறது. பலரும் பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என்று குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தற்போது வாட்ஸ் ஆப் துணை நிறுவனர் பிரைன் ஆக்டன் இப்படி ஒரு டிவிட்டை செய்துள்ளார். இது பெரிய பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது.

    யார் இவர்

    யார் இவர்

    பிரைன் ஆக்டன், வாட்ஸ் ஆப் நிறுவனம் தொடங்குவதில் மூளையாக செயல்பட்ட நபர்களில் ஒருவர். இவர்தான் அந்த நிறுவனத்தின் துணை நிறுவனர். இதற்கு முன்பு ஆப்பிள், யாஹூ ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்து இருக்கிறார். தொழில்நுட்ப துறையில் அதிகம் மதிக்கப்படும் நபர்களில் இவரும் ஒருவர்.

    தனி நிறுவனம்

    தனி நிறுவனம்

    இந்த நிலையில் 2014ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப்பை 19 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. ஆனாலும் பிரைன் ஆக்டன் தொடர்ந்து வாட்ஸ் ஆப்பில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பிரைன் ஆக்டன் வாட்ஸ் ஆப்பில் இருந்து விலகினார்.

    நீக்குங்கள்

    தற்போது பேஸ்புக் குறித்து பிரைன் ஆக்டன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ''இதுதான் நேரம் உடனடியாக பேஸ்புக்கை டெலிட் செய்யுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டிவிட் டெக் உலகில் பெரிய புயலை கிளப்பி இருக்கிறது.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பலரது அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தற்போது பிரைன் இப்படி டிவிட் செய்ய சொல்லியுள்ளார்.

    English summary
    'It is time. Delete Facebook' says WhatsApp co-founder Brain Acton on Twitter. Cambridge Analytica issue became viral after his tweet about Facebook.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X