விபத்தில் பலியான மகனின் அஸ்தியை ‘வைரமாக’ மாற்றிய இத்தாலித் தந்தை
ரோம்: விபத்தில் பலியான தனது மகனின் அஸ்தியை வைரமாக மாற்றியுள்ளார் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தந்தை ஒருவர்.
தமது அன்புக்குரியவர் இறந்துபோனால், அவர்களது நினைவாக அவர்கள் பயன்படுத்தியப் பொருட்களைப் பாதுகாப்பது பலரின் வழக்கம். ஆனால் இதுவரை கேட்டிராத புதிய முறையாகத் தனது இறந்துபோன மகனின் சாம்பலை வைரமாக மாற்றியுள்ளார் இத்தாலியைச் சேர்ந்த பாசமிகு தந்தை.

இத்தாலியின் வடக்குப்பகுதியில் உள்ள டிரேவிசோ என்ற நகரில் வாழ்ந்துவரும் 55 மதிக்கத்தக்க செல்வந்தர் ஒருவர், தனது 20 வயது மகனை இந்த ஆண்டு ஆரம்பத்தில் கார் விபத்து ஒன்றில் பறி கொடுத்தார்.
பின்னர் அவனது உடல் சொந்த ஊரிலேயே புதைக்கப்பட்டது. ஆனபோதும், மகன் நினைவிலேயே வாடிய தந்தை மகனது உடலை வைரமாக்க முடிவு செய்தார். அதன்படி, மீண்டும் அவனது உடலைத் தோண்டியெடுத்து எரியூட்டினார். அதன் மூலம் கிடைத்த அஸ்தியைச் சேகரித்தார்.
அந்த அஸ்தியை சுவிட்சர்லாந்தில் உள்ள ஆய்வகம் ஒன்றிற்கு அனுப்பினார். அங்கு அஸ்தியில் உள்ள கார்பனைப் பிரித்தெடுத்து ஒரு அறையில் பாதுகாத்து, அதன்பின் அதிக அழுத்தம் மற்றும் எரிமலை ஒத்த வெப்பத்தை அந்த அறைக்குள் செலுத்துவதன்மூலம், அதனை வைரமாக மாற்றியுள்ளனர்.
இந்த அஸ்தி வைரம் செய்யப்படுவதற்கு 18,000 டாலர் செலவானதாகவும், மேலும், சரியாக எட்டு மாதங்கள் கழிந்த நிலையில் அவரது மகனின் நினைவஞ்சலி வைரம் அத்தந்தைக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications