Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாட்டிக்கிட்டியே பங்கு".. இறந்த தாயை போல் வேடமிட்டு ரூ.80 லட்சம் பென்ஷன் பெற்ற மகன்.. சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

ரோம்: இத்தாலியில் தாய் இறந்ததை மறைத்து அவரை போல் மேக்கப்புடன் வேடமணிந்து ரூ.80 லட்சம் பென்ஷன் பணத்தை வாங்கிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

இத்தாலியின் போர்கோ விர்ஜிலியோ நகரை சேர்ந்தவர் கிராசியெல்லா டால்ஓக்லியோ. வயது 82. இவர் ஓய்வூதியம் பெற்று வந்தார். இந்நிலையில் தான் கிராசியெல்லா டால்ஓக்லியா மறைந்த நிலையில் அவரது மகனான 56 வயது நிரம்பிய முன்னாள் நர்சை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது:

italy-man-poses-as-dead-mother-and-gets-rs-80-lakh-pension

கிராசியெல்லா டால்ஓக்லியோ ஓய்வூதியம் பெற்று வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டில் மறைந்தார். ஆனால் தாயின் மறைவை அவரது மகன் யாரிடமும் கூறவில்லை. அதேபோல் உடலையும் அவர் இறுதி சடங்குகளுடன் அடக்கம் செய்யவில்லை. வீட்டிலேயே உடலை வைத்தார். தாயின் உடலை ரசாயனங்கள் மூலம் பதப்படுத்தி பத்திரமாக வைத்தார்.

மேலும் தனது தாயின் ஓய்வூதியத்தை அவரது பெயரில் வாங்க முடிவு செய்தார். அதன்படி தனது தாயை போல் அவரது ஆடைகள், லிப்ஸ்டிக் மற்றும் ஒட்டுமுடி உள்ளிட்டவற்றை மகன் பயன்படுத்தினார். அதனை வைத்து தனது தாய் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்பதை அதிகாரிகளை நம்ப வைத்தார். இப்படியாக கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 53 ஆயிரம் யூரோவை (இந்திய மதிப்பில் ரூ.80 லட்சம்) வாங்கி அவர் மோசடி செய்து வாங்கி உள்ளார்.

சமீபத்தில் பென்ஷன் தொடர்பான ஆவணங்களை புதுப்பிக்க வேண்டிய நிலை வந்தது. இதையடுத்து மறைந்த தாய் கிராசியெல்லா டால்ஓக்லியோ போன்று மகன் வேடமிட்டார். பதிவு அலுவலகத்துக்கு சென்றபோது அவரது குரலில் வேறுபாடு தெரிந்தது. அவ்வப்போது ஆண்களின் வாய்ஸ் வந்தது. இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

இதுபற்றி விசாரித்தபோது தான் அவர் தனது தாயின் இறப்பை மறைத்து அவரை போல் வேடமிட்டு பென்ஷன் பணம் வாங்கி வருவது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் தற்போது கிராசியெல்லா டால்ஓக்லியோவின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுபற்றி போர்கோ விர்ஜிலியோ நகரின் மேயர் பிரான்சியோ அபோர்ட்டி கூறுகையில், ‛‛ஆவண சரிபார்ப்புக்கு வந்த கிராசியெல்லாவின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்தது. அவரது தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றம் தான் இதற்கு காரணம். அவரது கழுத்து வயதானவர்களின் கழுத்து போல் இல்லை. கழுத்து தடித்துப்போய் இருந்தது. தோல் சுருக்கங்கள் இயற்கையானது போல் இல்லை.

குறிப்பாக கைகளில் உள்ள தோல் சுருக்கம் 80 வயதை தாண்டியவர் போன்று இல்லை. இதனால் சந்தேகம் வலுத்தது. மேலும் கிராசியெல்லாவின் உண்மையான போட்டோவையும், இப்போது வந்தவரின் போட்டோவையும் ஒப்பிட்டு பார்த்தபோது நிறைய வித்தியாசங்கள் இருந்தன. இதுபற்றி விசாரித்தபோது தான் கிரேசியெல்லா 3 ஆண்டுகளுக்கு முன்பே இறந்ததும், அவரது மகன் தனது தாய் கிரேசியெல்லா போன்று வேடமிட்டு பென்ஷன் தொகையை வாங்கியதும் தெரியவந்துள்ளது.

மேலும் இறந்த கிரெசில்லாவின் உடல் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அந்த உடல் ரசாயனத்துக்கு மத்தியில் ஸ்லிப்பிங் பேக்கில், போர்வை சுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கிரெசில்லா எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தான் தெரியவரும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+