டிரம்ப்புக்கு எதிராக வலை பின்னுகிறாரா மகள் இவாங்கா.. அதிபராக முயற்சிப்பதாக பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வருகிறது டிரம்ப் பற்றிய புயலை கிளப்பும் புத்தகம்- வீடியோ

  நியூயார்க்: தன்னுடைய எதிரியை வடகொரியாவிலும் பாலஸ்தீனத்திலும் தேடிக்கொண்டு இருக்கும் இருக்கும் டிரம்ப் தன்னுடைய வீட்டிற்குள்ளே தேடுவதற்கு மறந்துவிட்டார். ஆம் அவருக்கு முக்கிய போட்டியாளராக அவரது மகள் இவாங்கா டிரம்ப் உருவாகி இருக்கிறார்.

  டிரம்ப் குறித்து இன்று வெளியாக இருக்கும் 'பயர் அண்ட் ஃபுரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்' என்று புத்தகத்தில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மைக்கேல் வுல்ப் என்ற அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையாளர் எழுதிய இந்த புத்தகத்தில் இதற்கான எல்லா ஆதாரங்களும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

  இது மட்டும் இல்லாமல் டிரம்ப் செய்யும் சின்ன சின்ன விஷயங்களும் அவர் மக்களிடம் இருந்து மறைக்கும் சில ரகசியங்களும் கூட இதன் மூலம் வெளியே தெரிந்து இருக்கிறது.

  தோற்க வேண்டும்

  தோற்க வேண்டும்

  உலகில் இருக்கும் நிறைய நாடுகள் டிரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்று கனவு கண்டது. ஆனால் டிரம்ப்பின் குடும்பத்தில் இருந்த பலருக்கும் இந்த கனவு இருந்து இருக்கிறது. டிரம்ப் தோற்றால் அவர் அரசியல் வாழ்க்கையில் இருந்து சென்று விடுவார் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். இதன் மூலம் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் பெரிய ஆளாக மாறமுடியும். மேலும் இவாங்கா கணவர் ஜெராட் குஷ்னரும் இதன் மூலம் பெரிய ஆளாக மாற முடியும் என்று கூறப்பட்டு உள்ளது.

  மரண பயத்தை காட்டிட்டாங்க

  மரண பயத்தை காட்டிட்டாங்க

  டிரம்பிற்கு ஒரு வித்தியாசமான பழக்கம் இருக்கிறது. அவருடைய பல் துலக்கும் பிரஷை யாராவது எடுத்தால் அவருக்கு பிடிக்காதாம். மேலும் அவருடைய சட்டைகளையும் யாரும் தொடக்கூடாது. யாராவது இதன் மூலம் தன் உடலில் விஷத்தை செலுத்தி தன்னை கொன்று விட முடியும் என்று அவர் சந்தேகப்பட்டு இருக்கிறார். மேலும் இதை குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக தனி படையே அமைத்து இருக்கிறார்.

  முடி

  முடி

  இவாங்கா டிரம்ப் தன் தந்தை டிரம்ப் மீது ஏதோ ஒரு வித வெறுப்பில் இருந்துள்ளதாகவே கூறப்பட்டு இருக்கிறது. டிரம்ப்பின் ஆரஞ்ச் நிற முடிக்கு பின் இருக்கும் கதையை அவர் கூறியுள்ளார். இதற்காக அவர் தனி பணியாளரை வைத்து தன்னுடைய தலையில் ஸ்பிரே அடித்துக் கொண்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய சிறிய அறையை தியேட்டராக மாற்றி நாசம் செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

  சதி திட்டம்

  சதி திட்டம்

  இவாங்கா டிரம்ப் எப்படியாவது டிரம்ப்பை அதிபர் பதவியில் இருந்து இறக்கிவிடலாம் என்று திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார். அவர் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக மாறுவதற்கு எல்லா திட்டமும் ரெடியாகிவிட்டதாக இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியா தொடங்கி உலகம் முழுக்க டிரம்பை விட இவாங்கா டிரம்பிற்குத்தான் அதிக மதிப்பு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The book on Donald Trump which is named as 'Fire and Fury: Inside the Trump White House' written by Journalist Michael Wolff has set to release today. This book has already made reasonable shaking in and out of white house. The book contains many unknown secrets about Trump, Trump Jr, Ivanka's plan to became president, Russia's help for Donald.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற