கஞ்சா கேஸில் சிக்கிய ஜாக்கிசான் மகனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை – பீஜீங் கோர்ட் உத்தரவு
ஷாங்காய்: போதைப் பொருள் வழக்கில் சிக்கிய ஜாக்கிசான் மகனுக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கிசான் குங்பூ சண்டை படங்களில் நடித்து சாகசம் புரிந்து வருகிறார். சீனாவை சேர்ந்தவரான இவருக்கு ஜெய்சீ சான் என்ற மகன் உள்ளார். இவரும் ஜாக்கிசானை போன்று நடிகர் மற்றும் பாடகராக உள்ளார்.

போதைப்பொருள் உட்கொள்ளுமாறு சிலரை அவர் வற்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது 100 கிராம் எடையுள்ள "மரிஜுவானா" என்ற போதைப்பொருள் அவரது வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதை தொடர்ந்து அவர் போதைப்பொருள் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்த வழக்கு கிழக்கு பீஜிங் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஜெய்சீக்கு ஆறு மாத சிறை தண்டனையும், 2000 யுவான் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஜெய்சீ சிறையில் உள்ளதால் அடுத்த மாதமே அவர் விடுதலையாகி விடுவார் என்று தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications