இந்திய தேசிய கோடி தலைகீழாக பறந்த விவகாரம்: மன்னிப்பு கோரியது ஜப்பான்!
கோலாலம்பூர்: மலேசியாவில், ஜப்பான் பிரதமருடனான மோடியின் சந்திப்பின்போது தேசிய கொடி தலைகீழாக பறந்த சம்பவத்திகு ஜப்பான் மன்னிப்பு கோரியுள்ளது.
மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, மோடி, ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயை இன்று காலை சந்தித்தார். இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் இடத்தில் இரு நாடுகளின் தேசிய கொடிகள் சிறு கம்பத்தில் பறக்கவிடப்படுவது வழக்கம். அதேபோல மோடி-சின்சோ சந்திப்பின்போதும் இரு நாட்டு கொடிகளும் பொருத்தப்பட்டிருந்தன.

ஆனால், ஊழியர்கள் அவசர கதியில், இந்திய தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்டுள்ளனர். இரு தலைவர்களும் சந்தித்துக்கொண்டபோது பத்திரிகை போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது, இந்திய தேசிய கொடி தலைகீழாக பறப்பதும் போட்டோவில் கிளிக் ஆகிவிட்டது. இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த தூதர அதிகாரிகள், கவனக்குறைவால் இந்த தவறு நிகழ்ந்துவிட்டதாக விளக்கமளித்திருந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவத்துக்கு ஜப்பான் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், அவசரகதியில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியாதலால் தெரியாமல் இந்த தவறு நிகழ்ந்து விட்டதாகவும் அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது.












Click it and Unblock the Notifications