For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"மக்களே அதிகமாக சரக்கு அடிங்க.. வரி வருவாய் குறைஞ்சு போச்சு..!" சர்ச்சை கிளப்பும் தேசிய வரி ஏஜென்சி

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் இளைஞர்களின் மது பயன்பாட்டை அதிகரிக்க அந்நாட்டு அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டம் பேசுபொருள் ஆகியுள்ளது.

Recommended Video

    Who Is Shinzo Abe? | துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஷின் சோ அபே... யார் இவர்? *World

    தமிழ்நாட்டில் அரசின் டாஸ்மாக் மூலமே மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மது விற்பனையால் சமூகம் சீரழிவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

    இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பூரண மது விலக்கை அறிவிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் ஜப்பான் அரசு சர்ச்சைக்குரிய திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.

     ஜப்பான் புகுஷிமாவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை! ஜப்பான் புகுஷிமாவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை!

    ஜப்பான்

    ஜப்பான்

    ஜப்பான் நாட்டில் இளைஞர்கள் மத்தியில் மதுக் குடிக்கும் பழக்கத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு புதுப்புது திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் பெரியளவில் குறைந்த நிலையில், இளைஞர்கள் அதிகம் மது அருந்துவதை ஊக்குவிக்கும் வகையிலான திட்டத்தை ஜப்பான் அரசு தொடங்கியுள்ளது. ஜப்பான் நாட்டின் தேசிய வரி ஏஜென்சி இந்தப் புதிய திட்டத்தைத் தொடங்கி உள்ளது.

     வரி வருவாய் குறைவு

    வரி வருவாய் குறைவு

    ஜப்பான் நாட்டில் மதுபான விற்பனை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், மதுவைப் பிரபலப்படுத்தி மீண்டும் பயன்பாட்டை அதிகரிக்கும் புதிய பிஸ்னஸ் ஐடியாக்களை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் இளைஞர்கள் மத்தியில் மாறி வரும் வாழ்க்கை முறையே மது பயன்பாடு குறைய முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

     என்ன காரணம்

    என்ன காரணம்

    இளைஞர்களிடையே மது விற்பனையை அதிகரிக்கவும் புதிய தயாரிப்புகள் குறித்த ஐடியாக்களும் அதில் கேட்கப்பட்டு உள்ளன. மேலும், புதிய மெட்டாவர்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விற்பனை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்தும் ஐடியாக்களை கொடுக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது. பிறப்பு விகிதம் குறைவது, முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, கொரோனாவால் ஏற்பட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக ஜப்பான் நாட்டில் மது விற்பனை தொடர்ந்து சுருங்கி வருகிறது.

     கடும் சரிவு

    கடும் சரிவு


    1980களில் மதுபான விற்பனையில் இருந்து கிடைத்த வருவாய் 5%ஆக இருந்தது. இது 2011இல் 3%ஆக குறைந்தது. கொரோனாவுக்கு பின்னர் இது மேலும் குறைந்து இப்போது 1.7%ஆக உள்ளது. 2020 நிதியாண்டில் மது மீதான வரி வருவாய் முந்தைய ஆண்டை விட ¥110 பில்லியன் (ரூ. 6,444 கோடி) குறைந்து ¥1.1 டிரில்லியனாக (ரூ. 64,443 கோடி) உள்ளதாக அந்நாட்டின் வரி அமைப்பு தெரிவித்தது.

     புதிய திட்டம்

    புதிய திட்டம்

    1995ஆம் ஆண்டில் ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 100 லிட்டர் மது குடித்து வந்த நிலையில், 2020ஆம் ஆண்டில் அது ஆண்டுக்கு 75 லிட்டராகக் குறைந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்த புதிய போட்டியை ஜப்பான் அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் இளைஞர்கள் கொடுக்கும் ஐடியாக்களை வைத்து மது விற்பனையை மேம்படுத்துவதே அவர்கள் திட்டம்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    இளைஞர்களுக்கு எது பிடிக்கும் என அவர்களிடமே கேட்டு, அதற்கேற்ப திட்டங்கள் செயல்படுத்த உள்ளதால் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதேநேரம் அளவுக்கு அதிகமாக மது குடிக்காமல் சரியான அளவில் மது குடிப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களும் இதில் இடம் பெற வேண்டும் என அந்நாட்டு மருத்துவ சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    English summary
    Govt Plans to increase alcohol consumption anong japan youths: (ஜப்பான் நாட்டில் தொடர்ந்து குறையும் மது பயன்பாடு) Japan alcohol consumption falling steadly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X